'ஐ' யோடு கையாடி
மெய்யான வாழ்வை
பொய்யாக மாற்றி
பரீட்சையை பாழாக்கிவிட்டு
ஆசானை வையாதே
நெய்யாத்துணியை
மெய்மீது போர்த்தினால்
பையவே அவிழ்ந்து விழுமே-அதற்காய்
நெய்யாத்துணியை
பொய்யானதென
வையாதே
கையால் கொய்ய முடியா
பழக்கொய்யாவை
வெய்யது என
வையாதே
கருமை செம்மை பூசிய
மங்கையவளை பொம்மையாய்
பால்நிற பதுமையாய் எண்ணி
காதலித்துவிட்டு - அவள்
மையனைத்தும் நெய்யது போல்
கரைந்து வடிந்ததும்
பொய்யானவள் என
அவளை வையாதே
மெய்யானதை மறந்துவிட்டு
பொய்யானதை திறந்துவிட்டு
கையாலே குற்றமிழைத்துவிட்டு
கையாலாகாதவன் நீ - ஏன்
மெய்யானதை வையாமலிருப்பதில்லை
யாவும் எம் கைவினை
பாவம் சகலமும் நம் செய்வினை
காவும் எம்மை பொய்வினை
மேவும் என்றும் மெய்வினை
அரும்பதம்
ஐயோடு- I phone
வையாதே-திட்டாதே
நெய்யாத - தைக்காத
வெய்யது- தீயது/வெம்பியது
கருமை- சுருமா
செம்மை- Lips tick
காவும்-தொற்றும்
மேவும்- மிகைக்கும்
No comments:
Post a Comment