அருமையான பனுவல் "இலங்கையில் இனக்கலவரங்களும் முஸ்லிம்களும் 1915-2002"
எம்.எ.ஸ்.எம்.அனஸ்,வ.அமீர்தீன்,ஏ.ஜெ.எல்.வஸீல் ஆகியோரின் ஆய்வு.
பன்னெடுங்காலமாக நல்லபல சரித்திரத்தை ஒருபக்கம் இலங்கை கொண்டிருந்த பொழுதும் அதன் மறுபக்கத்தில் மறைக்கமுடியாத மறுக்கமுடியாத பெரும் புற்றுப்பிணியாக இருந்து வருவது இனமோதல். வகைதொகையற்ற இனமோதல்களினால் வகைவகையான பகைவேர்கள் ஆழப்பதிந்ததனால் அவ்விருட்சங்களில் முகைவிடுகின்ற மொட்டுக்களும் இனவாதத்தோடுதான் இலங்கைத்தாயை பார்த்து புன்னகைக்கின்றன.
பெரும்பாலான எல்லா சிங்கள-முஸ்லிம் கலவரங்களை ஆழ அகல அலசும்பொழுது அடிப்படையாக அமைவன.
1.முஸ்லிம்கள் மீது காழ்ப்புணர்வு
2.முஸ்லிம்களது பொருளாராதத்தில் பொறாமை
3.முஸ்லிம்கள் சிறுபான்மையினர் எனும் இளக்காரம்.சிங்களவர்கள் பெரும்பான்மையினர் எனும் மமதை
4.இலங்கை சிங்களவர்களுக்கு மாத்திரமே உரித்துடையது எனும் மிகைப்பற்று(பிற இன ஒதுக்கல்)
5.பௌத்த பிக்குகளின் மதவெறி பிரசாரம்.
6.அரசியல் வாதிகளின் வாக்கு வங்கி நிறைந்து வழிய ஏற்றவழி இனவெறிப்பிரசாரம்
7.முஸ்லிம்களை மட்டம்தட்ட காரணம் தேடல் (வேண்டாப் பொண்டாட்டி கால்பட்டாலும் குற்றம் கைபட்டாலும் குற்றம்)
8.கலவரசூழ்நிலையின் பொழுது காவல்துறை மேலிட உத்தரவுடன்/சுயாதீனமாக பொடுபோக்குடன் செயற்படல்.பக்கச்சார்பு பட்சாபாதம் பாராட்டல்
9.எப்பொழுதும் ஊரடங்குச்சட்டம் சிறுபான்மையினருக்கு மாத்திரம்
10.கலவர நிலவரத்தை சீராக்க காவல்துறை சீராக்க வான்நோக்கி துப்பாக்கி வேட்டு வைத்தல் /முஸ்லிம் படைகளின் பக்கம் துப்பாக்கி வேட்டு வைத்தல்.
இதுபொன்று இன்னும் பல
இனி
1.முஸ்லிம்-சிங்கள காதல் தொடர்பு
2.சிங்கள-முஸ்லிம் போதைவியாபார தொடர்பு
3.நாட்டை,நாட்டு சட்டத்தை முஸ்லிம்கள் மதிக்காமை
4.நிதானமின்மை
5.பிறமத கலாசாரங்களை மதிக்காமை
6.பிறமத விசேட உற்சங்வங்களின் பொழுது அதற்கு இடையூறின்றி இருத்தல்
7.ஆடம்பரங்கள் அனாவசியங்களில் ஆழ்ந்து போதல்
8.பிறமத தொழிலாளிகளை முஸ்லிம் முதலாளிகள் மனிதாபிமானத்துடன் நடத்தாமை
9.வாய்த்தர்க்க வாக்குவாதங்ளில் பிறமதத்தாரை இனத்தாரை இழிவாக கருதியமை
இது போன்று இன்னும் பல
கொட்டஹேன கலவரம் -1883 (பௌத்தர் - கத்தோலிக்கர்)
சிலாபம் கலகம் - 1896 (முஸ்லிம் -கத்தோலிக்கர்)
இனி தனி சிங்கள - முஸ்லிம் கலவரங்கள்
1.சிங்கள-முஸ்லிம் கலவரம் -1915 (கண்டி பெரஹெரா)
2.புத்தளம் கலவரம்(1976)
3.காலி கலவரம்(1982)
4.காலி-கட்டுகொடை கலவரம்(2001)
5.உக்ரஸ்பிட்டி கலவரம்(1994)
6.மடவளை கலவரம்(1972/1977/1996)
7.பன்னல-எலபட கலவரம்(1985/1990/1999)
8.கலகெதர-மடிகே கலவரம்(1998)
9.நொச்சியாகம " "(1999.02.14)
10.வெலிமட " "(1998.05.02)
11.திஹாரி " "(2000.12.04)
12.கொப்பேய்கன " "(2000.12.15)
13.பதுளை ஹிஜாப் பிரச்சினை (தமிழ் -முஸ்லிம்)(1999)
14.மீயெல்ல " "(1999)
15.பள்ளேகம " "(2000.08.17)
16.திக்குவெல்லை " "(1998.05.08)
17.கண்டி லைன் பள்ளி பிரச்சினை (1915/1998)
18.பேராதனை பள்ளி " "(1997)
19.அறுப்பளை பள்ளி " "(1989/90)
20. வெல்லம்பிட்டி " "(2000.07.19)
21.வட்டெதனிய " "(2001.04.16)
22.மாவனல்லை " "(2001.04.20)
23.கொட்றா முல்லை "" "(2002.07.31)
24.மாளிகாவத்தை " "(2002.10.25)
25.மதுரங்குழி " "(1976/2002.11.17)
26.அளுத்கம (2014.06.16)
அளுத்கம பற்றி நூலில் குறிப்பிடப்படவில்லை
ஏனெனில் நூலின் ஆய்விற்குட்படுத்தப்பட்ட காலப்பகுதி 1915-2002
நீங்களும் வாசியுங்கள் பயன் தரும்
No comments:
Post a Comment