மது எதற்கு-கேடு
அது நமக்கு
மாது எதற்கு-கேடு
அது நமக்கு
சூது எதற்கு-கேடு
அது நமக்கு
எது நமக்கு-நலவை
நாடுவது நமக்கு
எது நமக்கு-கனவை
ஆக்குவது நமக்கு
எது நமக்கு-வீண்கனவை
நீக்குவது நமக்கு
இது எமக்கு
அது உமக்கு
எனும் பிணக்கு
இனி விலக்கு
யாவும் நமக்கு-எனில்
எமக்குள்ளேன் பிணக்கு
பொய் வழக்கு
போலிக்கணக்கு
திருட்டுத்துணுக்கு
அத்தனையும் விலக்கு
உண்மையை விளக்கு
உன் புலன் அடக்கு
உன் செருக்கு அடக்கு
உன் புகழ் அடக்கு
நீளும் நாவடக்கு
நீளும் கரம் மடக்கு
நாளும் நலதோடு தொடக்கு
நாளைய உலகு நமக்கு
நலவாய் உதிக்கும் கிழக்கும்
நயமாய் இருக்கும் நமக்கு
பிணக்கு வரின் நேரஞ்சுணக்கு
சிக்கல் யாவும் விலக்கு
தூக்கும் துவக்கு
தாக்கும் நமக்கு
தீய்க்கும் நமக்கு
துவக்கிலா போர்
துவக்கு-அது
எழுத்திலே இருக்கு(து)
காலம் சுருக்கு
வினை பெருக்கு
கல் மனத்தை உருக்கு
கல்லா மனத்தை கருக்கு
பொல்லா மனத்தை நறுக்கு
சொல்லா வினை
செய்பவனை புறமொதுக்கு
குருதிப்பெருக்கு
நீர்ப்பெருக்கு
வெள்ளப்பெருக்கு-என
அவதியுறும் மனிதனுக்கு
அள்ளிக்கொடுத்து அயலாருடன்
வாழப்பழக்கு
இத்தனையும் திருமறை
அருமந்த வாக்கு
இதன் பிரகாரம் நல்லதொரு
தேசம் உருவாக்கு
No comments:
Post a Comment