Monday, 30 May 2016

சுயம்

அடுத்தவனுக்கு
கொடுத்ததனை
எடுத்தனுபவிப்பதும்
உடுத்த உடையை
எடுத்தெறிந்து விட்டு
நடுத்தெருவில்
எடுப்பாய்
நடப்பதும் ஒன்று

எனக்கென்ற ஒன்றை
உனக்கென்று விட்டுத்தருவது
பூமிக்குள் போற்றத்தக்கது-அதற்காய்
எனக்கென்ற ஒன்றை
எனக்கே தெரியாது
எடுத்தனுபவிப்பது
எவ்வூர் நியாயம்

எனக்கென்ற மனையாளை
என்னையன்றி
ஏனையஎவனும்
ஏறெடுத்துப்பார்த்தாலும்
ஏறிமிதித்து எட்டி உதைப்பேன்

உனக்கென்ற மனையாளை
ஊரவர் உற்றுப்பார்த்தும்
ஊமித்துப்போய்
உறங்கிக்கிடப்பாயானால்
ஊருக்கே உபதேசி யான் ஆனால்
உயிரோடு உன்னைக்கொழுத்த
உத்தரவிடுவேன்

அதுசரி ஆன்றோர்
சொன்ன வாக்கு
மறக்குமா என்ன
எமக்கு?

காணமற்கண்ட நாய்க்கு
கரிச்சோறு நெய்ச்சோறாம்
ஆகா! என்ன வாக்கு
அமுதவாக்கு
சொன்ன நாக்கு
சப்பட்டும் வெற்றிலை பாக்கு

சுயத்தை சுயமாய்த்தான்
பெறவேண்டும்-மாறாய்
சுயத்தை மாற்றானிடம்
கேட்டுப்பெற்றால்  சவமாய்த்தான்
வாழ வேண்டும்

No comments:

Post a Comment