கற்றறியா மாந்தர்களை
பெற்றெடுத்து வெற்பளவு
குற்றங்களை இழைத்து
சுற்றங்களை பகைத்து
பாவையரை எள்ளி நகைத்து
பாவங்களை அள்ளி இறைத்து
பாதகங்களாலே பாரிலெங்கும்
படையெடுத்து
அவனியெங்கும் உடையின்றி
பவனி வந்த மடந்தையருக்கு
உடந்தையாய் இருந்தது
இந்த மக்கமா நகரமே
இன்னாரெல்லாம் நபி
அண்ணலார் முன்னோராமே-நாளை
கொதித்தெழும் அக்கினியில்
குதித்து வீழக்காத்திருந்தோராமே
தண்டனை பெற இருந்த
இத்தனை பித்தர்களையும்
புரட்டுப்போலி சித்தர்களையும்
சுத்தம் செய்ய முத்தான செம்மல் நபிவந்து
பாவப்பித்தகற்றினாரே
விடப்புற்றகற்றினாரே
விதை நெற்றூன்றினாரே
நலவாய் நயமாய்
கற்றுரைத்தாரே
போர் வீரர்களை
வாட்சமர் சூரர்களை
வாய்ச்சொல் தீரர்களை
நல்ல நபித்தோழர்களை
பாவக்கிடங்கில் வீழ்ந்தோரை
பாழான பாதாளத்தில் கிடந்தோரை
பிரித்தறிந்து பாராத பாமரரது
பாவக்கறை போக்கினாரே
மலர் மகரந்தங்களில்
சேகரமாகும் மதுவருந்த வரும்
மதுகரங்களாலே பறந்து
கடக்கமுடியா சாகரங்களை கடந்து
மாண்புண்டான மறைத்தூதுக்கு
பெயரே கேட்டிராத தேசங்களும்
பெயர் கேட்டதும் மூச்சடக்கி
நாவடக்கி கைகட்டி மண்டியிட்டன
ஆவிதுறந்த அண்ணலார் பின்
பூமி எங்கும் பரவத்தொடங்கி
கூவி அழைத்த நபித்தோழர்கள்
அபூபக்ர் உமர் உஸ்மான் அலி
எனும் உத்தம தோழர்
நால்வராலும் மகோன்னத
மாட்சிமை கொண்டு
நல்லாட்சி நடத்தினரே
மீயுயர் கர்வம் கொண்டு
மிதமிஞ்சி நின்ற மாபெரும்
அரசுகளெல்லாம்
அஞ்சி நிற்க ஆட்சி அமைத்தனராம்
உமையாவாம்,அப்பாசியராம்
உஸ்மானியராம்,மொகலாயராம்
அத்தனை அரசுகளும் ஐரோப்பியனால்
அடங்கிப்போனது அர்த்மிழந்தது
கிலாபத் வீழ்ந்தற்காய்
கீழானவர்கள் அல்ல யாம்
மீள ஒரு கிலாபத் மீளமேலெழும்
யாதெனில் நதிகள் பின்னகர்வதில்லை
No comments:
Post a Comment