Tuesday, 17 May 2016

மழைவெயில்

அக்கம்பக்கம் நீரில்லை
அக்குளில் நீருண்டெனில்
கண்டுகொள் அது வெயிலென்று
அக்கம்பக்கம் நீருண்டு
அக்குளில் நீரில்லையெனில்
கண்டுகொள் அது மழையென்று

அர்த்தராத்திரியாகியும்
அனைவரும் மனைக்கு வெளியில்
எனில் கண்டுகொள் அது வெயிலினகோரம்.
அர்த்தராத்திரியாகமலே
அனைவரும் மனைக்குள்ளெனில்
கண்டுகொள் அது ழையென்று

பட்சிகள் தங்களுக்கிடையில்
பாடிக்கொண்டால்
கண்டுகொள் அது வெயிலென்று
பட்சிகள் தங்களுக்கிடையில்
கூடிக்கொண்டால்
கண்டுகொள் அது மழையென்று

மன்னாரமுது கதைத்துதிரிந்தால்
கண்டுகொள் அது வெயிலென்று
மன்னாரமுது கவியெழுதக்கண்டால்
கண்டுகொள் அது மழையென்று.

No comments:

Post a Comment