Monday, 16 May 2016

கலுழும் நெஞ்சு

பற்றி எரிகிறது வயிறு
என்றதும் நான் -
நீ பசி தாங்கமாட்டாய்
தம்பி என்று

தோசையும் துவையலும்
எனக்கென்றே தந்துவிட்டு
பானையில் கிடக்கும்
பழஞ்சோறு போதும் எனக்கு
என்று சொல்லி

தன் வயிற்றை
பாழாக்கிவிட்டு
என்  வயிற்றை மட்டும்
பாலாக்கினீரே

எனக்கு பசி மிகுதி-என
உமக்கே கரிசனை மிகுதி
பசிக்காத சில பொழுதுகளில்
பசிக்கிறதுனக்கு பொய்யுரைக்காதே

எனச்செப்பி ஆகாரங்கள் படைத்து
நான் உண்டுமுடித்து
போகும் என் வயிறு புடைத்து
அப்பொழுதும் போதாது மீளப்பசிக்கும் என்று சொன்னீரே

என் மாதாவுக்கே மாதா
ஆனாலும் எனக்குப்பின்தான்
என் மாதாவுக்கு மாதா
இனி இவனுக்காய்

அன்னமிட என்
அன்னையின் அன்னை
யான் கனிவாயழைக்கும்
கண்ணா இங்கில்லை

ஆனால் நாளை
சுவனத்து சுனையில்
எனக்கென்ற மனையில்
பசி தாங்கமாட்டாய் தம்பி
என இயம்பி
பாலும் கனியும் நறுந்தேனும்
புசித்திடு எனச்சொல்லுவது திண்ணம்

கலுழும் என் நெஞ்சு
என் கண்ணீரை இக்கவி விஞ்சு

கலுழும்-கலங்கியழும்

No comments:

Post a Comment