சிங்களத்தை செதுக்கிய சிற்பி
செதுக்கிய சிற்பங்களை விட்டு
சிறகொடிந்து செல்கிறது
சிற்பங்களை சிற்பியின்
நினைவுகள் கொல்கிறது
பல்லாண்டாய் பாடமெடுத்து
நல்லானாய் வாழச்சொல்லிக்கொடுத்து
வல்லோனாய் உருவெடுத்த
எம்மாசான் யாசீன் எம்மைபிரிகையில்
கல்லான எம்முள்ளம் கசிந்து வடிகிறது
பதங்கள் பலநூறு சொல்லி
அதனை பிரயோகிக்க பல
விதங்கள் பலகோடி சொல்லி
கவிகள் பல எழுதி அதனை
ரிதங்கள் பலவற்றில் பாடி
இதமாக எம்மிதயங்களில்கூடி
இருந்த உள்ளம் விடைபெறுகிறது
சிங்களத்துக்கு என்றும் தனிக்கொப்பி
தலையில் இருக்கவேண்டும் எந்நேரமும் தொப்பி
சிலவேளை போனால் தவறித்தப்பி
பேச்சாலே எம்மை செப்பி
முகத்தில் கரி அப்பிவிடுவார்
ஆனால் அப்பியெதெல்லாம் சந்தணம். செப்பியெதெல்லாம்
பொன் வந்தனம்.
பாலைநிலச்சிங்களத்தில்
ஒரு சிங்களச்சோலையதனை
சிரஷ்டித்துவிட்டுச்செல்லும்
யாசீன் ஆசானுக்கு நேசன் கவி
சமர்ப்பணம்
No comments:
Post a Comment