எல்லொளி மதியம்
நல்லொளி மதியும்
சில்லளி சுதியும் -நடனக்
கதகளியாய் மனமதில் பதியும்
வதை சூழ தேனியானால் தேன்வதை
ஒளி புடை சூழ மின்மினியானால்
தேனிலவு
வா நிலவே
வான் நிலவே
தேய் நிலவே
தேன் நிலவே
பூ நிலவே
பூமியெங்கும் உலவு
நின் நாமம் யாது செப்பி
உனைப்போற்ற
மதியா நிலவா
திங்களா இந்துவா
சந்திரனா அம்புலியா
எல்லொளி-கதிரவனொளி
சில்லளி- சில் வண்டு
No comments:
Post a Comment