Tuesday, 23 February 2016

சாப்பாடு

சாப்பாடு ஏற்பாடானால்
கூப்பாடு வீண்பாடு.
பாக்கோடு நாக்காடினாலும்
ஆப்போடு தளபாடம் ஆக்கினாலும்
சீப்போடு நரைமயிர் நீக்கினாலும்
காப்போடு கவினாகினாலும்
சாப்பாடு சாப்பிட வருவர்ர்.

பிணம் படுக்கும் சாக்காடானாலும்
சாக்காடு சிலவேளை பூக்காடானாலும்
சாப்பிடும் ஒரே நோக்கோடு
மீண்டெழுந்து சாப்பிட வருவர்.

No comments:

Post a Comment