ககனம் ஏழு பூமியேழு
ஆடவர் மடமாதர்
பருவங்கள் ஏழு
வாரம் அது நாள் ஏழு
நரகேழு சுவனநகரேழு
இறைவன் இச்சிரஷ்டியில்
வழுவேது?
தவறு தேடிகளைத்தால்
நீ கழுவேறு, நாயன் மீது
நச்சரித்தால் உன் பிறப்பு
கோவேறு
ஆடவர் மடமாதர்
பருவங்கள் ஏழு
வாரம் அது நாள் ஏழு
நரகேழு சுவனநகரேழு
இறைவன் இச்சிரஷ்டியில்
வழுவேது?
தவறு தேடிகளைத்தால்
நீ கழுவேறு, நாயன் மீது
நச்சரித்தால் உன் பிறப்பு
கோவேறு
மூன்றொ?முப்பதினாயிரமோ?
முப்பத்து முக்கோடி
கடவுளர் இம்மேதினி ஆள
உள்ளனரோ?
முப்பத்து முக்கோடி
கடவுளர் இம்மேதினி ஆள
உள்ளனரோ?
சுயம்பின்றி விசும்பேது
பசும்புல்லும் உசும்பாது
அம்பு பாயாது கம்பு காயாது
மானுடமே நம்பு நம்பினால்
உம் உளத்தே நோயேது?
பசும்புல்லும் உசும்பாது
அம்பு பாயாது கம்பு காயாது
மானுடமே நம்பு நம்பினால்
உம் உளத்தே நோயேது?
நரம்புணர பிரம்பு வளர
ஆய்வோருக்கென்ன அதிசயம்
இஃதென்ன அதிசயம்?
இறைவனுக்கு இஃது சிறுவிசயம்
ஆய்வோருக்கென்ன அதிசயம்
இஃதென்ன அதிசயம்?
இறைவனுக்கு இஃது சிறுவிசயம்
ஓடி வரும்நதி பாடி வரும்சுதி
தேடிரும் விதி கூடிவரும் மதி
நம்மைநாடி வரும் சுவனபதி
இறைவனை மறுத்தால் நம்கதி கஷ்டகதி
தேடிரும் விதி கூடிவரும் மதி
நம்மைநாடி வரும் சுவனபதி
இறைவனை மறுத்தால் நம்கதி கஷ்டகதி
தீயினில் நீர் கொதி
இதனுள் நீ குதி
இஃதே உன் தலைவிதி
நீ செய்யாதே சதி
ஆண்டவன் உனக்கு செய்வான் சதி
இதனுள் நீ குதி
இஃதே உன் தலைவிதி
நீ செய்யாதே சதி
ஆண்டவன் உனக்கு செய்வான் சதி
உன் சதி மந்த கதி
இறைசதி கடுகதி
கெடுதி புரியாதே
சடுதியாய் புழுதியாய் போவாய்
இறைசதி கடுகதி
கெடுதி புரியாதே
சடுதியாய் புழுதியாய் போவாய்
நீ செய்யாதே சூழ்ச்சி
அதில் நீ வீழ்ச்சி
கொள்ளாதே மனம் காழ்புணர்ச்சி
கொள்ளு மனமே கடமையுணர்ச்சி
அதில் நீ வீழ்ச்சி
கொள்ளாதே மனம் காழ்புணர்ச்சி
கொள்ளு மனமே கடமையுணர்ச்சி
மானுடா! நீ கற்றறிவபன்
இறைவா! நீ முற்றறிவன்
இறைவா! நீ முற்றறிவன்
(ககனம்-வானம்,விசும்பு, வழு-குற்றம், கோவேறு-கழுதையும் குதிரையும் புணர்ந்து ஈனுவது, சுயம்பு-தானாய் தோன்றியவன்,அழ்ழாஹ், முற்றறிவன்-யாவற்றையும் அறிந்தவன்)
No comments:
Post a Comment