Sunday, 21 December 2014

காதலன்-கணவன்


காதலன்:  மெழுகுதோல் அவள் அழகு
 கணவன் : அழுகு தோல் அவள் கழுகு

காத: அவள் பேச குரல் ஒலிகீதம்
கண:  அவள் பேச குரல் நஞ்சுசாதம்

காத: நெஞ்சு மலரும் குயில்முகம் விழி பூக்கும்
கண: நெஞ்சு உலரும் துயில்முகம் விழி  தீய்க்கும் 

காத: கூடி மகிழ தோணும்
கண: ஓடி வெகுள தோணும்

காத: கருமை கூந்தல் கண்டு  வியந்தேன்
கண :எருமை கூந்தல் கண்டு பயந்தேன்

  காத: சாந்தி பெற அவள் முகம் பார்ப்பேன்
  கண:வாந்தி வர அவள் முகம் பார்ப்பேன்

காத: அள்ளி பணம் இறைப்பேன்
கண:கள்ளியவள் பார்த்து முறைப்பேன்

 காத:என் வாழ்வின் சுடர் ஒளி
கண:என் வாழ்வின் இடர் குழி

காத:வாநாளில் காணாத தேவதை அவள்
கண:வாநாளில் காணாத தீவதை அவள்

காத:அவளை அடைந்தால் கேசரி நான்
கண:அவளை அடைந்தததால் வேசரி நான்


வெகுளி-வெகுளல்-சினம்
 வதை-துன்பம்
கேசரி-சிங்கம்
வேசரி-கழுதை

No comments:

Post a Comment