Saturday, 3 January 2015

மைத்திரி

கற்பழிப்பு அதற்கென அழைப்பு
பகிரங்க பிரசங்க அரசாங்க அழைப்பு
முரசெங்கே? நீ ஒலி எழுப்பு
அரசுக்கு ஆனந்தக்களிப்பு
சூதாடச்சொல்லி சொற்பொழிவு
சூறையாட அனுமதி மலிவு
கொங்கை காட்டித்திரியும்
மங்கையரை சங்கையென
சொல்லும் மா இழிவு
பாமரர்கு எத்தருணம் பிறக்கும் தெளிவு
அரசுக்கு வரும் அவசரமாய் அழிவு
வீதியில் செல்லச்சூழும் பீதி
இரத்த அழுத்தம் ஏறும் பாதி
எம்முடலில் உயிரே மீதி
அத்தனையும் இனத்துவ சாதி
வட்டரக்கையே நீர் எடுத்தோதி

உம்மவருக்கு அழகுற போதி
நாம் எப்போது உடைத்தோம் உம்போதி
நல்லுறவை எடுத்தோதி நீர் சாதி
மைத்திரியை ஆதரி
அநீதியை சங்கரி
நலவை உங்கரி
பிளவை ஓங்கரி
நம்நாட்டுச்சோதரி
நீ மைத்திரியை ஆதரி
மஹிந்த அரசு மாயக்கீரி
நாமாவோம் அஞ்சும்கௌதாரி
எம்மில் எத்தனைபேர் பொய் பட்டதாரி
அத்தனையும் மஹிந்த அரசே சூத்தீதாரி
புறக்கணிப்பு பல பாதிரி
நம்நாடு ஜனநாயகமாதிரி
நம்நாட்டுச்சோதரி
நீ மைத்திரியை ஆதரி
எமக்கு கெடுதலை புரிந்த
வடக்கில் விடுதலைப்புலிக்கும்
தெற்கில்
கொடுதலை பலசேனாவுக்கும்
உலகிலிருந்து விடுதலை கொடுப்போம்
புத்தம்புது தரவு பல வரவு
பணம் பல கொள்ளை
மஹிந்த உடையே வெள்ளை
எங்கே? அல்லை
அங்கே போட்டு உடை அவன் பல்லை
ஏற்று அவன் முதுகில் உல்லை
வில்லை வளைத்து ஞானசாரயை
அம்பாய் ஏவிவிட்டு
தெம்பாய் பேசும்
வம்பு புரியும் நம் தலைவர்
கொம்புடைப்போம் புறப்படுவீர்
கொலை கொள்ளை புரிந்து
உலை கள்ளை உருவாக்கி
விதை நெல்லை விலை நெல்லாய்
கொடுத்தவனுக்கு மனங்களில்
வைத்திருக்கிறார்கள் சிலை வெள்ளை
அழிச்சாட்டியம் அட்டூழியம்
போலி நாட்டியம் புகழ்ந்து
கூறும் வீண் கட்டியம்
அத்தனையும் அழித்தொழிப்போம்
நம்நாட்டுச்சோதரி
நீ மைத்திரியை ஆதரி.
(சங்கரி-அழி, உங்கரி-சமம்மதி, ஓங்கரி-
வாந்தியெடு, அல்லை-நீர் கொண்ட
குகட்டை)

No comments:

Post a Comment