Friday, 31 October 2014

மத்திமம்

மெத்தப்படித்து முடித்து
ஈசன் இல்லை எனச்சொல்லமாட்டோம்
செத்தபடிப்பு படித்து முடித்து
கல்லும் கடவுள்  நெல்லும் கடவுள்  எனச்சொல்லி
அல்லும்பகலும்  அலைமோத மாட்டோம்.
ஜல்ல ஜலாலஹு அழ்ழாஹ்தான்
எம் கடவுள் எனச்சொல்லுவோம்.
கத்தி கருவி எடுத்து
குத்தி குடலை உருவி எடுத்து
இரத்த அருவி பெருகிவர
மனிதபுனிதம் அருகிவர
கொலைபுரியமாட்டோம்
முக்காடிட்டு முகம்மூடி

மூர்சையாகவுமாட்டோம்

முழுதும் துறந்து
முற்றும்பிறந்த மேனியாய்
அவனிதனில் பவனியெதுவும் வரமாட்டோம்
குனூத் ஓத கைதூக்கு
இல்லை வாள் துக்கு
அதிகம் கதைக்க வெட்டிவீசு நாக்கு
எனும் கடும்போக்கு
இல்லை எப்போதும் எமக்கு
இறைவனுக்கும் இன்ஸானுக்கும்
இடையே இன்னொருவன்
இல்லையென எடுத்து இயம்பி
பொய்யக வையகம் இவ்வையகம்
மெய்யக வையகம் மறுவையகம்
என பைய பைய ஐயம் களைவோம்
ஆவியுடல் ஞானம் அவசியம்
காவியுடை தரித்து கானகம் புக மாட்டோம்
வாவி நீர்பெருக உழுது உழைப்போம்
கூவியழைத்து இறைவனை அழுது வணங்குவோம
ஏவிய இறைவாக்கை புவியினில் சொல்வோம்
பாவியெனும் கறைபோக்கி எமக்கே
நாம் சிறைஉருவாக்க்கி வாழ்ந்திடுவோம்்

No comments:

Post a Comment