காலா காலம் மாறுவதே மொழியாகும் திராவிட மொழிகளில் பழைமை மிகுந்த இலக்கியங்களும் ; இலக்கணங்களும் கொணடது தமிழ் மொழியே ; பழைமைக்கு பழைமையாய் ; புதுமைக்கு புதுமையாய் விளங்குவது தமிழ் மொழி.
“பழையன கழிதலும்; புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே"
என்றார் நன்னூலார். கி.பி. 3 - 6 ஆம் நூற்றாண்டு காலம் பழந்தமிழ் காலம் எனவும் கி.பி. 7 -18 ஆம் நூற்றாண்டு காலம் இடைக்காலத்தமிழ் எனவும் 19 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு தற்காலத்தமிழ் எனவும் பகுத்துள்ளனர் தமிழறிஞர். சங்க காலத்தமிழுக்கும் கங்கமருவிய காலத்திற்குமிடையில் உள்ள சொற்கள் வேறுபாட்டைக் கொண்டுள்ளன. ஒரு சொல்லின் பொருள் தொhடக்கத்தில் ஒன்றாக இருந்திருக்கும் ஆனால் இன்று அச்சொல் வேறொரு பொருளை குறிக்கும். சில சொற்கள் வழக்கிழந்து புதிய சொற்கள் பிறக்கின்றன.
“அரக்காம்பல் நாறும் வாய் அம்மருங்கிற்கு அன்னலே ……” எனும் அடியில் அரக்கு என்பது செந்தாமரையையும் நாறும் வாய் என்பது மணம் தரும் வாய் எனவும் பொருள்படும் ஆனால் இன்று நாறும் என்பது துர்நாற்றத்தை குறிக்கன்றது.
சமூகத்தினால் மாற்றம்
• நோன்பு ; தொழுகை - இவை பழந்தமிழ் சொற்கள். இன்று இச்சொற்களை இந்து சமயத்தவர் பயன்படுத்துவதில்லை மாறக விரதம் ; வழிபாடு என்றே பயன்படுத்துகின்றனர்;. இச்சொற்களை இஸ்லாமிய சமயத்தினர் பயனபடுத்துகின்றனர்;
• மையம் ; பிரேதம் ; சவம் - இச்சொல் இறந்த உடலை குறிக்கும். மையம் என்பதை மட்டுமே முஸ்லிம்கள் உபயோகிக்கின்றனர். இந்துக்கள் பிரேதம் ; சவம் என்பவற்றை உபயோகப்படுத்துகின்றனர்;.
பரந்த பொருண்மை குறிப்பு பொருண்மையாக மாற்றம்
• மாடு – “ மாடல்ல மற்றயவை” என்றார் வள்ளுவர். இங்கு எல்லா வகை செல்வத்தையும் குறத்தது. ஆனால் இன்று விலங்கினம் ஒன்றை குறிக்கின்றது.• இல்லான் - கல்வி ; செல்வம் ; புகழ் அறிவு இல்லாதவனை குறித்து நின்றது. ஆனால் இன்று செல்வம் இல்லாதவனை குறித்து நிற்கிறது;
• புல் - பழந்தமிழில் தென்னை ; பனையை குறித்தது. ஆனால் இன்று சிறிய புல் வகையை குறிக்கின்றுது.
• மான் - பழந்தமிழில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எல்லா வகை விலங்குகளை சுட்டியது. ஆனால் இன்று குறிப்பிட்ட ஒரு இனத்தை சுட்டுகிறது.
குறிப்பு பொருண்மை பரந்த பொருண்மையாக மாற்றம்
• தர்மம் - “ தர்மம் தலை காக்கும்” இங்கு அறம் எனும் கருத்தை குறிக்கும். ஆனால் இப்பொழுது ‘பிச்சை’ எனும் பொருளில் வழங்கப்படுகிறது.• களிப்பு – சங்க காலத்தில் கள்ளுண்டு மகிழ்வதை குறித்தது. ஆனால் இன்று மகிழ்ச்சியை குறிக்கின்றது.
• பறையர் -அன்று பறை முழங்கியவனை குறித்தது. இன்று கீழ் சாதியினரை குறிக்கின்றது.
• எண்ணெய் - குறித்த எள்ளில் இருந்து (எள் + நெய்) எடுத்த நெய்யை குறித்தது. ஆனால் இன்று எல்லா வகை எண்ணெய்களையும் குறிக்கின்றது.
• போர் - யுத்தம் என பழந்தமிழில் வழங்கப்பட்டது. ஆனால் இன்று வைக்கோற் போரை குறிக்கின்றுது.
சந்தர்ப்ப மாற்றம்
• தொடை – தொடுத்தல் எனும் கருத்துண்டு. ஆனால் கணிதத்தில் கூட்டம் எனும் கருத்தில் வழங்கப்படுகிறது.• வேந்தர் - மன்னனை குறிக்கும். ஆனால் இன்று பல்கலைக்கழக நிர்வாகியை குறிக்கின்றது.
• சூழ்ச்சி - சூழ்ந்து நிற்றலை குறிக்கும். ஆனால் இன்று சதி என்பதை குறிக்கின்றது.
இழிவுப்பொருண்மை உயர்வுப்பொருண்மையாக மாற்றம்
• கழகம் - பழந்தமிழில் சூதாடும் இடத்தை குறித்தது. ஆனால் இன்று பல்கலைக்கழகத்தை குறிக்கிறது.• அரண்மனை – பாதுகாப்பு இ காவல் அமைந்த வீடுகளை குறித்தது. ஆனால் இன்று அரசன் வாழும் இடம் என்பதை குறிக்கின்றது.
கால மாற்றத்தால் பொருள் மாற்றம்
• அகலம் - பழந்தமிழில் மார்பு. இன்று இடத்தின் பரப்பு.
• கோடை – பழந்தமிழில் மேல் காற்று. இன்று வெயிற்காலம்.
• விருந்தினர் - பழந்தமிழில் பதியவர். இன்று உறவினர்.
• தஞ்சம் - பழந்தமிழில் எளிமை. இன்று அடைக்கலம்.
• கிழவன் - பழந்தமிழில் செல்வமுடையவன.; இன்று முதியவன்.
• பொழுது – போழ்து – போழ் - போது
• ஆயினால் - ஆனால்
• ஆயினும் - ஆனும்
• உருண்டை – உண்டை
புறநானூறு “ என்றலைக்கடன் ” என்கிறது. இங்கு கடன் என்பது கடமையாகும் ஆனால் இன்று கடன் எடுத்தலையும் ; கொடுத்தலையும் குறிக்கிறது. காலம் மாறுவது போலவே சொற்கள் மாறூலும் சொற்களக்கான பொருள் மாறுதலும் ஒரு மொழியின் இயல்பாகும். எனவே மொழியில் சொறகள் நிலையானவை அல்ல. கால மாற்றத்திற்கு ஏற்ப புதிய சொற்கள் தோன்றுதலும் பழைய சொற்கள் புதிய வடிவுடன் விளங்குதலும் பழைய சொற்கள் மறைதலும் சொற்பொருள் மாற்றமாகும்.
No comments:
Post a Comment