கம்பீர நடை நாம் காணுகையிலே
அஞ்சும் படை அவர் போகையிலே
கண்ணிய உடை அவர் வருகையிலே
மடைக்கதவு திறக்கும் பேசயிலே

வினாக்கு விடை நாம் கேட்கையிலே
இதழில் இளநகை நாம் பார்கையிலே
சின்ன மயிர் இளநரை சென்னியிலே
மளித்திருக்க மீசை சிவத்திருக்குமுதடு
தாடியை மளித்தால் அவர் அழகு
இருநாள் மளிக்கா தாடியில் பேரழகு
ஓருநாளும் பேரழகுக்கு குறைவிருக்காது
விளையாட வீரரென வருவார்
விளையாட்டு விபரீதமாகும் என்பர் அறிஞர்
விடுதிகளுக்குள் புகுந்து விளையாட்டை
விபரீதமாக்குவார். விபரீத விளையாட்டை
உருவாக்குவார். தலை யணைக்கு கீழ்
திறன்பேசிகள் திறந்து பார்ப்பார்
மைதான விளையாட்டை முடித்து
மேசை விளையாட்டை தொடங்குவார்
எங்களன்பின் ஆசான் ஜய்னுல் ஹுசைன்
என்பேனதனை மறுப்பார் யார்?
எலியை கண்ட பூனை
என்ன செய்யும்? எட்டிப் பிடிக்கும்
எலிதான் எங்கள் திறன் பேசிகள்

ஊட்டி வளர்க்கிறான் பூனையை வீட்டவன்
காட்டியும் கொடுக்கிறான் தினம் எலியை
போட்டி போட்டு பிடிக்கிறது பூனை
வீட்டுப் பண்டங்களை காக்கவே
ஊட்டி வளர்க்கும் வீட்டவன் நிருவாகம்
போட்டி போடும் பூனை ஆசான்
மாட்டிவிடும் எலியோ எம்திறன் பேசிகள்
சேதமுறா வீட்டுப்பண்டம் நாமேதான்
பாடவேளை நேரம் பிந்தி வருவார்
அப்பொழுதாவது நாம் முந்தி வரமாட்டோமாயென
அவர் பிந்தி வந்த பின்னும் நாம்
பிந்திவந்து தொல்லை தச்த போதும்
ஒருவர்பின் ஒருவர் வந்து வந்து
தொந்தரவு தந்த போதும் மனம்
நொந்திட பேசமாட்டார்
நான் நளீமியா வந்தொரு நாழிகையில்
என் நெஞ்சை கொள்ளை கொண்டவர்
மேடைக்கு வந்த கம்பீர நடை
கண்டு காதல் கொண்டேன்
என்னிரு திறன் பேசிகளை அவர்
எடுத்தா ரென்றாலும அவர் மீது
கொண்ட காதல் பெரு மதிப்பு
பெருஞ் சினத்தை தரவில்லை

நாளை நான் வீடு போகவேண்டும்
என்று நான் சோன்ன போதும்
நாசூக் காய் மறுக்க மாட்டார்
நாளை போக முடியா தென
நேரிடையாய் நகைத்தே சொல்வார்
சொல்லில் மென்மை தவழும்
சொல்லியதில் வன்மை கனலும்
அழகிய வரிகள்
ReplyDeleteநான் நளீமியா வந்தொரு நாழிகையில்
என் நெஞ்சை கொள்ளை கொண்டவர்......