Saturday, 6 October 2018

பேய்ம்மழை


பச்சிலைச்செடி கொடி மரம்
உச்சிலை முழுக மேகமாது
எச்சிலை உமிழ்ந் தாளோ
அச்சநி லையில் அவைகள்

முகில் மங்கைக்கு மாதவிலக்கோ
துகில் நனைத்து கொடூரக்குளிரில்
கொடுவிக் குறுகி  தங்கிளை சுருட்டி
நாணிச் சுருண்டு கோணிக்கொள்கிறதே!

கஞ்சமுக காரிகையின் கொங்கை மஞ்சு
எஞ்சி வாழும் உயிருக்கும் அவனிக்
குஞ்ச ழாமல் இருக்க கொஞ்சமிலால்
நெஞ்சு திறந்து சுரக்கிறாள் பாலை

பாலையில் அக்கினிக் குஞ்சு எழாமல்
சோலையில் அன்புக்கனி அழிந்திடாமல்
காலையிலோ கதிரவனே கனலாகமல்
மாலையில் மந்தை வாடாதிருக்க பெய்

சாலையில் நீரேறாமல் - பாதி
வேலையில் இடர் தராமல் -காசு
ஓலை மையழியாமல்  நான் நாடிய
வேலை முடிக்கும்படி மழையே பெய்
இலை இறையே நீ பெய்வி

பேய்ம்மழையே பெரும்மழையே
பெய்  குறையே போகும் வழியில்
பெரும் சிறையே போகாது நான்
அதில் தனியே மழையே

2018.10.06
10.43 AM

No comments:

Post a Comment