Monday, 1 October 2018

பாதினாவெல

செங்கிளை செவ்விலை
சிற்றிலை சிதறியநிலை
சுற்றிலும்மலை சுற்றுதுதலை
ஆகா! எத்தனை விலை?

வெள்ளைப்பனி மெல்லப்படர
கொல்லை மலை எனை
கொள்ளை கொள்ள
சொல்லை செதுக்கி என்
மனக்கல்லை கரைக்கிறேன்

பசியமஞ்சள் பூசியச்செடியில்
சொட்டும்பனி கசியக்கண்டேன்
கசியக்கசிய மனம் எனது
மசியக்கண்டு மயக்கங்கொண்டேன்

கரும்பாறை வெண்பாறை - கொடி
அரும்பேற வெடிக்கக்கண்டேன்
எறும்பேறும் கரும்பாறை
காணயிலே இறையிருக்கக்கண்டேன்

கரும்பேறும் எறும்போ
நறுஞ்சாறை சுவைக்காது
திரும்பாதோ? அது போல
மலையகம் வந்து பாதினாவலை
பார்த்து சுவைக்காது திரும்பேனோ?

பனிப்படை படையெடுத்து
பருவதம் சூழ பருவதம் சூழ்
பாதினாவலை புகழ்பாட பா
பலநூறு பாடினும் போதாதே!

No comments:

Post a Comment