Sunday, 3 June 2018

ரஸான் அல் நஜ்ஜார்

யூதக்கோழை பொய்பூதப்பேழை
கோளும் புறமும் நாளும் சொல்ல
ஊதி விடுவானே ஊளை - முட்டி
மோதிட திராணியில்லாமல்

பண்பால் பெண்பால் ஏற்கும் பேயன்
தாய்ப்பால் பருகாது நாய்ப்பால் பருகியவன்
தனைச் சூழவொரு மதிற் கட்டி
சுற்றிவொரு வேலி சமைத்து
 
தனக்கொரு கவசம் புனைந்து
நடுவிலே இருக்கையமைத்து
இருக்கையிலே அரணமைத்தும்
அஞ்சி அஞ்சி சாகும் பேடியவன்

அஞ்சாது நெஞ்சு நிமிர்த்தி அகண்ட
வெளியில் முதுகு காட்டாமல் முகங்காட்டி
முன்னேறும் பொன்னேறுகள் மீது தோட்டாக்களை
தூவிவிடும் பாவிமகனே! 

அக்ஸாவின் சாவிகளை திருடிவிட்டு
அட்டகாசங்களை அவிழ்த்துவிட்டு
அடைக்கலம் தந்தவரையே அங்கிருந்து
அடித்து விரட்டிவிட்டவனே!

அதைக்கேட்டதும் அவர்கள் மீதே
தோட்டா மழை தூவினும் நீ
தூயவன் ஆகாய் நீ நீசனென
நீக்கமற உலகே அறியும்.

இதைக்கேள் அக்ஸா புனிதப்பெரு
வெளியில் தினம் நீ தோட்டாக்களை
தூவி முடித்தாலும் தினம் தினம்
திரும்ப வருவர் திருப்பித்தருவர்

குருதிகக்டலென கொன்று குவித்தாலும்
குருதிக்கொடை கொடுத்தேதான் இறப்பர்
நெருப்பை மூட்டி நீ மறித்தாலும்
நெருப்பின்மீதே நிமிர்ந்து நடப்பர்

வெட்டத் தழைப்பர் புதைக்க முளைப்பர்
எரிக்க பறப்பர் சிரிக்கச்சிரிக்க இறப்பர்
இறந்து இறந்தே சுவனத்தில் சிரிப்பர்
சிரித்து சிரித்தே சுவனத்தை களிப்பர்

அவர்களில் ஒருத்தி ரஸான் அல்நஜ்ஜார்
அக்ஸா புனிதப்பெருவெளி ஒருதுளி
உன் குருதி புனிதங்கொண்டது இனி
அழைக்கிறதுனை சுவனக்கனி

துப்பாக்கி வேட்டு உனை துளைத்தே
துவண்டதடி உன் துப்பட்டா  அதில்
தவண்டதடி ரெத்தம் யுத்த முனையில்
நீ வித்தென விழுந்தாயடி

எத்தனை வீரர் வீழும் போதிலும்
விழுந்தடித்து விரைந்து போய்
மருந் தெடுத்து கரைந்துருகி
ஒற்றடம் போட்டவளே!

எம் உயிர்நாடியோடு இழையோடிய
அக்ஸாவை மீட்க ஈமானை மட்டுமே
ஆயுதமாய் செய்து போரிடும் தோழர்
உயிருக்கு போராடுகையில் 
 
அவ்வுயிர்களை காக்கவென போராடியவள்
அதற்கென அலைந் தோடியவள் அதிலே
நாட்களை விதைத்தவள் சிட்டாகிய
சிறுவயதில் செந்நீர் சிந்தியவள் நீ!!!

சிறுகுழந்தை பெருங்கிழவி
திட இளைஞன் என யாவரும்
சிந்தும் குருதியை ஏந்தியவள் நீ
நீ சிந்திய குருதிய ஏந்த எவருண்டு???? 

சுவனத்து மணமேறிய மலர்
சுவனத்து மதுவேறிய தேன்
சுவனத்து தேனூறிய கனி
சுவனத்து கனியேறிய தரு
சுவனத்து தருவிறைக்கும் நிழல்
சுவனத்து நிழல் சேர் தென்றல்
சுவனத்து தென்றல் வீசு மாளிகை
யாவும் அழைக்கிறது ரஸான் அல்நஜ்ஜார்
நாளை நானுன்னை சந்திப்பேன்

No comments:

Post a Comment