வசந்தமென வந்து சொரிகிறது
நண்மைகளை தந்து பொழிகிறது
உலகப்பந்து முழுதும் கோடி அருள்
வசந்தமென வந்து சொரிய வந்தது ரமழான்
இந்தவேளையிலே பாவங்களில்
வெந்து போன எம் உள்ளங்கள்
நொந்து மனம் நோகி இறைவனிடம்
மன்றாடி மீள வசந்தமென வந்து
சொரிகிறது ரமழான்
தூரத்தே யாரும் பாராமல்
தூசுபடிந்து காணாமால் போன
திருமறையை திறந்து பார்த்து
நெஞ்சில் சுமந்து நாவில் தவழ்ந்து
மனதில் குடியிருக்க வசந்தமென
வந்து சொரிகிறது ரமழான்
இம்மகோன்னத ரமழானில்
வீணும் விளையாட்டும்
கூத்தும் கும்மாளமும்
சண்டையும் சச்சரவும்
காயமும் கத்தியும்
என்றே சிறார் யாவரும்
காலம் போக்கையில்
நேரம் வீணாக்கயில்
வசந்தமென வந்து சொரியும்
ரமழானை உச்சி முகர்ந்து
அள்ளி அணைக்க நல்லவழி
நமக்கு சொல்லித்தர வந்த
அறிவு வள்ளல் (Rvc)
ரமழான் விடுமுறைக்கால பாடநெறி
அறிவும் திறமையும்
விழுமியமும் கலந்து
ஈமானும் பிசைந்து
உற்சாகமாய் களிக்க
வாய்த்த வரம்தான் RVC
No comments:
Post a Comment