Sunday, 13 May 2018

மழை

பொழிந்த மழையில்
மிதந்த நளீமியா
மிகுந்த மழையில்
தவழ்ந்த நாம்
நடந்த நிகழ்வுகளை
கடந்த பொழுதுகள்

நள்ளிரவு முதல்
வெள்ளொளி வரை
விடாத மழையில்
படாத பாடு பட்டு
சுடாத நிசியில்
சுருண்டு உறங்க

சூழ்ந்து வந்து
சுமந்து கொண்டது
வான் கிழிந்த
முகில் பிழிந்த
மழையின் வழிந்த
நீராறு !!!!!!!

No comments:

Post a Comment