Sunday, 29 April 2018

கிளைமொழிகள் தமிழின் சிறப்பு


தமிழ்  மொழி ஆதி மொழி,   வராலாற்றாதாரங்களின் அடிப்படையில் முதல் மொழி,  மாபெரும் இலக்கியங்ளையும் தனக்கேயென ஐந்திலக்கணங்களையும்  கொண்டமைந்த எம்மொழியைவிடவும் தரம் குன்றாத வளமான மொழி,  அதனால்தான் " கற்றோன்றி மட்தோன்றா முன் தோன்றிய மூத்த குடி " என தமிழ்குக்குடிகளை பற்றி கூறவர்.
தமிழுக்கென தனியான சிறப்புக்கள் இருக்கின்றன.  அவற்றுள் ஒன்றுதான் பிரதேச கிளைமொழிகள்.

பிரதேச கிளைமொழிகள் பிரதேசத்துக்கு பிரதேசம்  மாறுபடும் அது இலங்கையின் 


1.புத்தள கிளைமொழி

3.யாழ்ப்பாண கிளைமொழி

4.மன்னார் கிளை மொழி

5.பேருவளை கிழைமொழி

6.கொழும்பு கிளை மொழி

7.குருநாகல் கிளைமொழி

8.கிழக்கு மாகாண கிளை மொழி

 

என்பனவற்றை குறிப்பாக சுடடினாலும் இன்னும் ஒரு  சில விடுபட்டிருப்பதற்கான சந்தர்ப்ங்கள் உண்டு. இந்தியாவில் இருக்கின்ற தமிழை பார்க்கும் பொழுது இலங்கைத்தமிழ்  அதைவிட பலநூறு மடங்கு அதன் தூய்மையை தக்கவைத்திருக்கிறது.  தமிழ் மதுரையிலே பிறந்தாலும் இன்று ஈழத்தில்தான் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது.  உலகிலே எங்குமே தமிழ் நூறு விழுக்காடு தூய்மையை பேணவில்லை என்றாலும் ஒப்பீட்டளவில் இலங்கை முதன்மை பெறுகிறது.

அதனடியாக இலங்கையின் பிரதேசங்களுக்கு பிரதேசம் வேறுபாடான மொழிப்பிரயோகங்களை கொண்டிருப்பது சிறப்புக்குரியதே ஒழிய ஒருநாளும் மறுப்புக்கோ வெறுப்புக்கோ உரியதல்ல. தற்பொழுது பாடசாலைகளில் தமிழ் கற்கும் மாணவர்கள் " க்ரியாவின் தற்கால தமிழ் அகராதியை" உபயோகிக்ன்றனர்.  இது இலங்கை நாட்டுக்கு பொருத்தமற்றதாகும். 

ஏனெனில் அவ்வகாராதி பெரும்பான்மையான சொற்களுக்கு  " உயர்வழக்கு, பெருகிவரும் வழக்கு  " என குறிப்பிடுகிறது. அதாவது கற்றோர், அறிஞர்  பிரயோகிக்கும் வழக்கு என பொருள்படும் ஆனால்  இது இந்தியாவில்தான் உயர்வழக்கு இலங்கையில் பாமர. மக்கள் பேசுகின்ற தாழ்வழக்காகும்.
எனவே இந்தியாவின் உயர்வழக்கு இலங்கையின் தாழ்வழக்கு எனில் இலங்கையின் உயர்வழக்கு தனி சிறப்புக்குரியது. அதனால்தால் தமிழகத்தில் மேடைகளில் பேசுகின்ற உரைகள் இலங்கை பாமரமக்களின் பேச்சுவழக்கு உரைநடைக்கும் கீழானது ஆகவே இலங்கையில் மேடைகளில் கற்றோர்.,அறிஞர் பிரயோகிக்கும் வகையில் புதிய  "க்ரியா"அகராதிகளை உபயோகிக்ககாது பழைய அகராதிகளை உபயோகிக்க வேண்டும். அப்பழைய அகராதிகளில் கூட இலங்கைக்கே உரிய தனியான இரண்டாயிரம் தமிழ்ச்சொற்கள் கிடையாது என்பது இலங்கைக்கான தனியான தமிழ் அகராதியின் தேவையை வேண்டி நிற்கிறது.

இதற்கேற்பே தமிழின் தூய்மையை மேற்கொள்ள விரும்புவதாக வரிந்துகட்டிக்கொண்டு வந்தோர்  இலங்கையின் கிழக்கு மாகாணத்தை திருத்துமுன்பு தமிழகத்தையும் இந்தியாவையும் தமிழின் தாயகமான மதுரையையும் திருத்த முயலுவது உண்மையில் தமிழுக்கு செய்யும் தொண்டாகும்.அதைவிடுத்து தமது சுய இலாப நோக்கிற்காக மதவாதத்தையும்,  இனவாதத்தையும், பிரதேசவாதத்தையும், மொழிவாதத்தையும் கையிலெடுத்து தாய்த்தமிழின் தனிச்சிறப்பை சிதைக்காதீர்கள்.

"கிறுவி"  என்பது தூய தமிழ்  கிறுகுதல் - சுற்றுதல், திரும்புதல் எனும் பொருளுடையது. அதுபோல "#போட்டுவாரன்" என்பது போய்விட்டு வருகிறேன் எனும் தூயதமிழாகும். அது போல "#கொரோடாதே" என்பது குரல் விடாதே எனும் தூயதமிழின் மருவு ஆகும். விரிவஞ்சி வட,  கிழக்கு, தென்னிலங்கை கிளைமொழிகளுக்கு ஒவ்வொரு உதாரணங்களை வழங்கி இருக்கிறேன்.

இன்னும் சங்கம், சங்கமருவிய காலங்களை புலவர்கள் பிரயோகித்த தமிழை "செந்தமிழ்" என்றும் பாமர பொதுமக்கள் உபயோகித்த தமிழை   "கொடுந்தமிழ் " என வழங்கினர். ஆனால் இன்று அதனை "எழுத்து வழக்கு,  பேச்சுவழக்கு " என வழங்குகின்றோம். மேலும் எல்லோருக்கும் புரியும் படியான தமிழை "நியமத்தமிழ் " என்கிறோம்.

இதெல்லாவற்றையும் கடந்து ஆங்கிலமொழியை நோக்குமிடத்து அது பலநாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.

1.பிருத்தானிய ஆங்கிலம்

2.அமெரிக்க ஆங்கிலம்

3.இந்திய ஆங்கிலம்

 
இவ்வாறு இன்னும் உண்டு. இவை தமிழ் பிரதேச கிளைமொழிகளுக்கு ஒப்பானது. இதற்காக எந்த ஆங்கில மொழி பேசுபவர்களும் அடுத்தவர்களை சாடியதோ வசைபாடியதோ கிடையாது.

சேர சோழ பாண்டியர் மூவ்வேந்தர் ஆட்சியின் வீழ்ச்சிக்கு பின்னர் தமிழின் முக்கிய மூன்று கிளைமொழிகளான 

1.தெலுங்குத்தமிழ்

2.கன்னடத்தமிழ்

3.மலையாளத்தமிழ்


என்பன பின்னர் தமக்கேயுரிய இலக்கணங்ளை வகுத்துக்கொண்டு இலக்கியங்களை பெருக்கிக்கொண்டு தனித்தனி தேசங்களை உருவாக்கிகொண்டன

1.தெலுங்கு  - தெலுங்கு தேசம் (தெலுங்கானா)

2.மலையாளம் -மலைள தேசம்

3.கன்னடம் -கன்னட தேசம் (கர்நாடகம்)


இதுபோல சிங்கள இனவாதத்தால் தமிழ் தேசாமான தமிழீழத்தை கேட்டு போராடி  சீரழிந்தது போல முஸ்லிம்களும் தங்களுக்கான  சோனகத்தமிழை தனிமொழியாக ஆக்கி அவற்றிற்கான தனி இலக்கணங்களையும், இலக்கியங்களையும் தோற்றுவித்து 

தனியான
1.சோனக மொழி
2.சோனக கலசாரம்
3.சோனக வரலாறு
4.சோனக நிலவுருவம்

ஒருதேசிய இனத்தின் சகல கூறுகளையும் கொண்டு ஒரு தனியான சோனகதேசத்தை கோரி போரிட்டு நாட்டிலும் மொழியிலும் விரில்களையும் பிளவுகளையும் தவிர்த்திடுவோம். 


நாம் மொழியால் தமிழர்.
நாம் இனத்தால் சோனகர்.
நாம் மதத்தால் இஸ்லாமியர்.
நாம் தேசத்தால் இலங்கையர்.



2 comments:

  1. ஈழத்து கிளைமாெழியின் வகைகள் பற்றி விளக்கம் தாருங்கள்

    ReplyDelete