Friday, 13 April 2018

ஆசிபா

பத்தினி சீத்தாவை ஐயங் கொண்ட
இராமன் நாமம் கொண்டு பாபர்
மசூதியை இடித்தவர்கள்  சீதா வம்ச
சிறுமியை  சிதைத்தது  புதிதாமோ?

சீச்சீ காறி உமிழும் போதும்
பீய்ச்சி சாணி எறிந்த போதும்
நாய்ச் சகவாசம் செய்யும்  பேய்
காய்ச்சல் காமம் கொண்டானே!

பாவ மறியா பசுங் கிளியை
பாதை யறியா பைங் கிளியை
பால்யம் மீறா  சிறு பிஞ்சை
பிசை ந்துண்ண போநாயே!

பிஞ்ச வளை பிய்ந்தவ ளாக்கினானே
பஞ்ச வளை நெய்ந்தவ ளாக்கினானே
நஞ்ச ருந்தி நடுத்தெருவில் நாளடா!
நாயென நாளைநீ மாளடா! 

நீதி யெலாம் தினம் சாகவே
வீதி யெலாம் மனிதம் மாளவே
நாதி யற்று போனாளே ஆசிபா
ஜாதி நிலை கொண்டதால்.

No comments:

Post a Comment