Tuesday, 27 March 2018

வில்பத்து பயணம்

சிகை யாவுஞ் சிவப்பு
செம்மண் தூசுக் கலப்பு
வில்பத்தின் வீதி வனப்பு
பயணிக்கு பெருஞ் சிறப்பு

பாதி வழியே பெருங் குழி
மீதி வழியே மரங் களடதி நீரில்லா நெடுந் தரையில்
ஆளில்லா அருங் கோடையில்


நீருள்ள சிறு வில்லில்
துதிக்கை பதித்து நீரள்ளி
அருந்துது  கருங் களிறு
பேருந்தோ அருகே நகருது 

புழுதி படிந்த மேனியில்
மேலும் பறந்து ஒட்டுது புழுதி
புழுதி போக்க பெய்தது
தூறல் மழை துமித்ததெனக்கு

வந்து சேர்ந்தேன்
நொந்த அயர்ந்தேன்
உதைபடு பந்தென
சுழன்றேன் வெந்தேன்
வீடு வந்தேன் பெரிதே
கவியிட்டேன் இனிதே

No comments:

Post a Comment