Tuesday, 6 March 2018

இலங்கை இனக்கலவரங்கள்

பன்னெடுங்காலமாக நல்லபல சரித்திரத்தை ஒருபக்கம் இலங்கை கொண்டிருந்த பொழுதும் அதன் மறுபக்கத்தில் மறைக்கமுடியாத மறுக்கமுடியாத பெரும் புற்றுப்பிணியாக இருந்து வருவது இனமோதல். வகைதொகையற்ற இனமோதல்களினால் வகைவகையான பகைவேர்கள்  ஆழப்பதிந்ததனால் அவ்விருட்சங்களில் முகைவிடுகின்ற மொட்டுக்களும் இனவாதத்தோடுதான் இலங்கைத்தாயை பார்த்து புன்னகைக்கின்றன.

1956 இற்கு பின்னரான காலப்பகுதியில் தொடர்ந்தும் நாடு முழுதும் தமிழ் இனத்தின் மீது சிங்கள இனவாதம் கண் மூக்கு பாராமல்  கட்டவிழ்த்துவிடப்பட்டது. அதற்கு அரசாங்க தலைவர்களும் பௌத்தமத தலைவர்களும்  ஆதரவும் அணுசரணையும் வழங்கி ஒரு பெரும் இன அழிப்பை நோக்கி அழைத்து வந்தனர். அதற்கு முன் தமிழ் இனம் 1915 சிங்கள -முஸ்லிம் கலவரத்தில் பழி அத்தனையையும் முஸ்லிம்கள் மீது சுமத்திவிட்டு,  படித்த தமிழினமும்,  முஸ்லிம்களுக்கு அடித்த சிங்கள இனமும் கைலாகு செய்த காலம் மலையேறிப்போனது.

பிற்பாடு தமிழ் இனம் தன் உரிமையை மீட்க அரசியல் ரீதியாக வென்றுவிடுவோம் என்று நினைத்தது ஆனாலும் அரச தலைவர்களான D.S. Senanayaka, S.w.R.D. Bandaranayaka, J.R.Jeyavardhana,  Sreema போன்றோரின் இனவாத அரசியல் தமிழினத்தை தமிழீழ தனி நாட்டு கோரிக்கை இட்டுச்சென்றது.

S.J.V.Selvanayaham அவர்களின் பல போராட்டங்களுக்கும் ஒப்பந்தங்களுக்கும்  பின்னரான தமிழ் மொழியும் அரச மொழி எனும் வேண்டுகோளை  பலநெருக்கடி நிலைக்குள் செயற்படுத்த முனைந்த போது  சோமராம
 ( Somaram pikku)
பண்டாரநாயகாவை சுட்டுக்கொன்றார்.  தந்தை செல்வாவின் 1977 மரணத்தின்  பின் தமிழினவாத ஆயுதக்குழுக்களை சிங்கள இனவாதம் வளர்த்துவிட்டது.EPRLF, EPDP, PLOT, TELO போன்றவற்றுள் LTTE முக்கியமானதும் மூர்க்கமானதுமாகும்.

1985 ஏறாவூரில் தமிழ் - முஸ்லிம் கலவரம்
1989 சம்மாந்துறை தமிழ் - முஸ்லிம் கலவரம்
1990 காத்தான்குடி பள்ளிச்சூடு
1990.10.25 வடபுல முஸ்லிம் வெளியேற்றம்

போன்ற மிகக்கொடூரமான நிலையில் தமிழினவாதம்  வந்து சேர்ந்தது. அத்தோடு முப்பது ஆண்டுகால உள்நாட்டு யுத்தமாக உருவெடுத்து யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதோடு தமிழினவாதம் தன்னினத்தையே அழிக்க வழிசமைத்துக்கொடுத்தது. என்றாலும் தமிழினவாதத்தை தோற்வித்த சிங்கள இனவாதம் தொடர்ந்தும் சிம்மாசனத்திலே இருந்து ஆட்சி செய்கிறது.

1505 இற்கு பின்னரான இலங்கையில் அதுவும் குறிப்பாக ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள இனவாதம் சிலவேளை ஆங்கிலேயேரின் பிரித்தாளும் சூழ்ச்சியோடும் பலவேளை சுயமாகவும் அநகாரிக தர்மபாலவால் போதிக்கப்பட்டும் பியதாச சிரிசேனவவால் எழுதப்பட்டும் மீகெட்டுவத்த குணானந்த பிக்குவால் பௌத்த நெறியாக்கப்பட்டும் வந்தது. அதே போன்று இன்று ஞானசார பிக்கு,  பாட்டளி சம்பிக்க, டான் பிரசாத் பல அமைப்புக்கள் , அரசாங்கம், அமைச்சர்கள் இன்னும் பல ஊடகங்கள் வெளிநாட்டு சக்திகள் என்பன இதன்பின் மறைந்துதிருக்ன்றன.

பெரும்பாலான எல்லா சிங்கள-முஸ்லிம் கலவரங்களை ஆழ அகல அலசும்பொழுது அடிப்படைகளாகஅமைவன.

சிங்களசமூகத்தின் தவறுகள்

 

1.முஸ்லிம்கள் மீது காழ்ப்புணர்வு


2.முஸ்லிம்களது பொருளாராதத்தில் பொறாமை


3.முஸ்லிம்கள் சிறுபான்மையினர் எனும் இளக்காரம்.சிங்களவர்கள் பெரும்பான்மையினர் எனும் மமதை


4.இலங்கை சிங்களவர்களுக்கு மாத்திரமே உரித்துடையது எனும் மிகைப்பற்று(பிற இன ஒதுக்கல்)


5.பௌத்த பிக்குகளின் மதவெறி பிரசாரம்.


6.அரசியல் வாதிகளின் வாக்கு வங்கி நிறைந்து வழிய ஏற்றவழி இனவெறிப்பிரசாரம்


7.முஸ்லிம்களை மட்டம்தட்ட காரணம் தேடல் (வேண்டாப் பொண்டாட்டி கால்பட்டாலும் குற்றம் கைபட்டாலும் குற்றம்) 


8.கலவரசூழ்நிலையின் பொழுது காவல்துறை மேலிட உத்தரவுடன்/சுயாதீனமாக பொடுபோக்குடன் செயற்படல்.பக்கச்சார்பு பட்சாபாதம் பாராட்டல்


9.எப்பொழுதும் ஊரடங்குச்சட்டம் சிறுபான்மையினருக்கு மாத்திரம்


10.கலவர நிலவரத்தை சீராக்க காவல்துறை  வான்நோக்கி துப்பாக்கி வேட்டு வைத்தல் அல்லது முஸ்லிம் படைகளின் பக்கம் துப்பாக்கி வேட்டு வைத்தல்.

 

முஸ்லிம் சமூகத்தின் தவறுகள்

 

1.முஸ்லிம்-சிங்கள காதல் தொடர்பு

2.சிங்கள-முஸ்லிம் போதைவியாபார தொடர்பு

3.நாட்டை,நாட்டு சட்டத்தை முஸ்லிம்கள் மதிக்காமை

4.நிதானமின்மை

5.பிறமத கலாசாரங்களை மதிக்காமை 

6.பிறமத விசேட உற்சங்வங்களின் பொழுது அதற்கு இடையூறின்றி இருத்தல்

7.ஆடம்பரங்கள் அனாவசியங்களில் ஆழ்ந்து போதல்

8.பிறமத தொழிலாளிகளை முஸ்லிம் முதலாளிகள் மனிதாபிமானத்துடன் நடத்தாமை

9.வாய்த்தர்க்க வாக்குவாதங்ளில் பிறமதத்தாரை இனத்தாரை இழிவாக கருதியமை

இது போன்று இன்னும் பல உள்ளன

கொட்டஹேன கலவரம் -1883 (பௌத்தர் - கத்தோலிக்கர்)
சிலாபம் கலகம் - 1896 (முஸ்லிம் -கத்தோலிக்கர்)
இனி தனி சிங்கள - முஸ்லிம் கலவரங்கள்

1.சிங்கள-முஸ்லிம் கலவரம் -1915 (கண்டி பெரஹெரா)

2.புத்தளம் கலவரம் (1976)

3.காலி கலவரம் (1982)

4.காலி-கட்டுகொடை கலவரம் (2001)

5.உக்ரஸ்பிட்டி கலவரம் (1994)

6.மடவளை கலவரம் (1972/1977/1996)

7.பன்னல-எலபட கலவரம் (1985/1990/1999)

8.கலகெதர-மடிகே கலவரம் (1998)

9.நொச்சியாகம கலவம் (1999.02.14)

10.வெலிமட    கலவரம் (1998.05.02)

11.திஹாரி  கலவம் (2000.12.04)

12.கொப்பேய்கன கலவரம் (2000.12.15)

13.பதுளை ஹிஜாப் பிரச்சினை (தமிழ் -முஸ்லிம்)(1999)

14.மீயெல்ல கலவரம் (1999)


15.பள்ளேகம   கலவரம் (2000.08.17)


16.திக்குவெல்லை  கலவரம் (1998.05.08)


17.கண்டி லைன் பள்ளி பிரச்சினை (1915/1998)


18.பேராதனை பள்ளி கலவரம்(1997)


19.அறுப்பளை பள்ளி கலவரம் (1989/90)


20. வெல்லம்பிட்டி கலவரம் (2000.07.19)


21.வட்டெதனிய   கலவரம் (2001.04.16)


22.மாவனல்லை   கலவரம் (2001.04.20)


23.கொட்றா முல்லை கலவரம் (2002.07.31)


24.மாளிகாவத்தை கலவரம் (2002.10.25)


25.மதுரங்குழி  கலவரம் (1976/2002.11.17)


26.அளுத்கம கலவரம் (2014.06.16)


27.கிந்தோட்டை  கலவரம் (2017.11.17)


28.அம்பாறை கலவரம் (2018.02.23) -கொத்து ரொட்டி


29.திகண -தெல்தெனிய கலவரம் (2018.03.05) 150/= கண்ணாடி

 

No comments:

Post a Comment