ஜலந்தா இறைவா!
நலந்தா நிறைவா (க)
வரந்தா மறைவா (க)
மரந்தா பிறைவா
நலந்தா நிறைவா (க)
வரந்தா மறைவா (க)
மரந்தா பிறைவா
பணந்தா கறைபோ
கலந்தா கரைபோ
கரந்தா ஆண்டவா!
கவலைகளை வேண்டவா
கலந்தா கரைபோ
கரந்தா ஆண்டவா!
கவலைகளை வேண்டவா
கருணைதனை தூண்டவா
மரந்தா மலர் வனந்தா
கடல் எரிந்தே கனல் எரிந்தே
முடியுமுன் மழைதான் மருந்தே
மரந்தா மலர் வனந்தா
கடல் எரிந்தே கனல் எரிந்தே
முடியுமுன் மழைதான் மருந்தே
வானிடிந்தே பெரும்மழை வருமே
மடைதிறந்தே நீர்படைவருந்தேரென
கொடை மனந்தா பாவியரை கொன்றிட
கொடு ஞ்சினந் தா
மடைதிறந்தே நீர்படைவருந்தேரென
கொடை மனந்தா பாவியரை கொன்றிட
கொடு ஞ்சினந் தா
புவி பிளந்தோ அக்கினி எழுந்தோ
பின் அனல் குளிர்ந்தோ மலை
இடிந்தோ மனமுடைந்தோ மானுடர்
போகமலிறைவை வரந்தா
பின் அனல் குளிர்ந்தோ மலை
இடிந்தோ மனமுடைந்தோ மானுடர்
போகமலிறைவை வரந்தா
அளந்தோ கற்பிளந்தோ
வானது விழுந்தோ இறைவா
அன்பு வளந்தா நின் கருணை
சொரிந்தே யாம் வாழ வரந்தா
வானது விழுந்தோ இறைவா
அன்பு வளந்தா நின் கருணை
சொரிந்தே யாம் வாழ வரந்தா
சிறந்தே வாழ்ந்து - நினக்கு
சிரந் தாழாமலே வாழ்ந்து
மறந்தே யுனை நான்
இறந்தே போகாமல் வரந்தா
சிரந் தாழாமலே வாழ்ந்து
மறந்தே யுனை நான்
இறந்தே போகாமல் வரந்தா
ஜகந்தா நற்சுகந்தா -நல்
அகந்தா இறைவா
முகந்தா வென்றும் பசுந்தா(க)
குளந்தா மூழ்கி விழுந்தாட
அகந்தா இறைவா
முகந்தா வென்றும் பசுந்தா(க)
குளந்தா மூழ்கி விழுந்தாட
வவரந்தா பலவளந்தா
அருளனது எம்மீது விழுந்தா(ல்)
இன்ன நிறை என்னென அளந்தா??
விண்ணது பிளந்தே வரந்தா
அருளனது எம்மீது விழுந்தா(ல்)
இன்ன நிறை என்னென அளந்தா??
விண்ணது பிளந்தே வரந்தா
No comments:
Post a Comment