ஆறறிவு மக்கள் யாம்
ஐயறிவு மாக்கள் தாம்
அவனியில் பூக்களாம் -அதனை
நபி வாக்கில் நோக்கலாம்
ஐயறிவு மாக்கள் தாம்
அவனியில் பூக்களாம் -அதனை
நபி வாக்கில் நோக்கலாம்
அன்றோர் அனற் காலம்
அறேபிய தீபகற்பத் தோரம்
அருங் கோடை பாலைநிலம்
ஆருமே அங்குவாராத நேரம்
அறேபிய தீபகற்பத் தோரம்
அருங் கோடை பாலைநிலம்
ஆருமே அங்குவாராத நேரம்
சனசஞ்சாரமே இல்லா தேசம்
சிலபேர் வந்துபோகும் தூரம்
சில புற்செடி பூண்டென்று பசுமையாம்
சற்றே ஆழங்கொண்ட கிணறாம்
சிலபேர் வந்துபோகும் தூரம்
சில புற்செடி பூண்டென்று பசுமையாம்
சற்றே ஆழங்கொண்ட கிணறாம்
அக்கினி வெயிலில் வந்தோரெலாம்
வந்திங்குதான் நீர் அருந்துவாராம்
ஒரு நாள் நாயொன்று அருகே
ஆறத்தாகமும் தீராப்பசியிலும் நின்றதாம்
வந்திங்குதான் நீர் அருந்துவாராம்
ஒரு நாள் நாயொன்று அருகே
ஆறத்தாகமும் தீராப்பசியிலும் நின்றதாம்
ஒழுக்கங்கெட்ட ஒருத்தி வந்தாளாம்
காசுக்காய் தன்கற்பை விற்பாளாம்
நா தொங்க நாயை கண்டாளாம்
மனமுருகி கருணை கொண்டாளாம்
காசுக்காய் தன்கற்பை விற்பாளாம்
நா தொங்க நாயை கண்டாளாம்
மனமுருகி கருணை கொண்டாளாம்
ஒழுக்கம் பேணும் ஒருத்தி இருந்தாளாம்
வணக்கமதில் ஒருநாளும் சுணக்கம் செய்யாளாம்
கடவுள் வாக்கை ஒழுகி நிற்பாளாம்
தொழுது வணங்கி பொழுது களிப்பாளாம்
வணக்கமதில் ஒருநாளும் சுணக்கம் செய்யாளாம்
கடவுள் வாக்கை ஒழுகி நிற்பாளாம்
தொழுது வணங்கி பொழுது களிப்பாளாம்
ஒருநாள் பூனையதை கட்டி வதைத்தாளாம்
குட்டிப்பூனை கட்டியே சில நாளானதாம்
உணவின்றியே ஒருநாள் இறந்து போனதாம்
வீணாய் கொலைப் பாவம் பெற்றாளாம்
குட்டிப்பூனை கட்டியே சில நாளானதாம்
உணவின்றியே ஒருநாள் இறந்து போனதாம்
வீணாய் கொலைப் பாவம் பெற்றாளாம்
கற்புநெறி காத்தவள் கௌரவங்கள் பேணியவள்
கடவுளுக்கே தன்னை அடகு வைத்தவள்
இறைவனை சினங் கொள்ளச் செய்தாள்
கற்பே இலாதவள் கடவுளுக்கே சினந்தந்தவள்
கடவுளுக்கே தன்னை அடகு வைத்தவள்
இறைவனை சினங் கொள்ளச் செய்தாள்
கற்பே இலாதவள் கடவுளுக்கே சினந்தந்தவள்
கடவுளையே இரங்க வைத்தாள்,
கற்பொழுக்கம் பேணிவள்
கடுஞ்சூடான நரகு நுழைந்தாளாம்., கற்பே இலாத பேதையவள்
குளிர் சுவனம் நுழைந்தாளாம்
கடுஞ்சூடான நரகு நுழைந்தாளாம்., கற்பே இலாத பேதையவள்
குளிர் சுவனம் நுழைந்தாளாம்
No comments:
Post a Comment