பிறக்கு முன் ஆறு திங்கள்
தந்தையப்து ல்லாஹ்வை இழந்தார்
பிறந்து ஆறு ஆண்டு கழிய
தாய் ஆமினாவை இழந்தார்
தந்தையப்து ல்லாஹ்வை இழந்தார்
பிறந்து ஆறு ஆண்டு கழிய
தாய் ஆமினாவை இழந்தார்
பாற்பல் விழுந்து புதுப் பல்
முளைக்கும் பால்யத்தில்
கோல் பிடித்து ஏடு எடுத்து
கற்கும் பேரறிவை இழந்தார்
முளைக்கும் பால்யத்தில்
கோல் பிடித்து ஏடு எடுத்து
கற்கும் பேரறிவை இழந்தார்
தோள் பெருக்கும் தோல் வெளுக்கும்
வாள் எடுக்கும் பாலிய த்தில்
கூடிப்பழகும் கூட்டாளியரை துறந்து
குகை யொன்றில் குடிகொண்டார்
வாள் எடுக்கும் பாலிய த்தில்
கூடிப்பழகும் கூட்டாளியரை துறந்து
குகை யொன்றில் குடிகொண்டார்
கூடியிருந்து கும்மாளமிட்டு பெறும்
கோடி இன்பம் அத்தனையுமே
நாடி வந்த மங்கையரைக் கண்டும்
ஓடியே ஒதுங்கி ஓராமானார்
கோடி இன்பம் அத்தனையுமே
நாடி வந்த மங்கையரைக் கண்டும்
ஓடியே ஒதுங்கி ஓராமானார்
ஆயிரம் மாதர் வரன்
வரிசை கட்டி நின்றும்
வரிந்து கட்டி வந்தும்
அன்னை ஹதீஜாவை மணந்தார்
வரிசை கட்டி நின்றும்
வரிந்து கட்டி வந்தும்
அன்னை ஹதீஜாவை மணந்தார்
அன்னையின் அகவை நாற்பது மணம்
இன்னொன்று நிகழ்ந்தவள் என்று
ஊரே சொன்னதும் கேளாமல்
நலவை யெண்ணி மணந்தாரே
இன்னொன்று நிகழ்ந்தவள் என்று
ஊரே சொன்னதும் கேளாமல்
நலவை யெண்ணி மணந்தாரே
இறை மறை போதிக்கவே
இறையாலயத்தில் இறைஞ்சயிலே
கறையூறிய கடுநாற்றக் குடலை
நபிகழுத்தில் சிலரிட்டாரே
இறையாலயத்தில் இறைஞ்சயிலே
கறையூறிய கடுநாற்றக் குடலை
நபிகழுத்தில் சிலரிட்டாரே
ஏகனை ஏற்ற பழிக்காய்
ஏறெடுத்துப் பார்க்க எவருமின்றி
ஆண்டு மூன்றாய் உண்ண
ஏதுமின்றி ஏங்கித்தவித்தாரே
ஏறெடுத்துப் பார்க்க எவருமின்றி
ஆண்டு மூன்றாய் உண்ண
ஏதுமின்றி ஏங்கித்தவித்தாரே
மாது அரசு பொருள் தருவோம்
தூது சொல்வதை விடு முஹம்மதே
என்று காடையர் சொன்னதுமே அதை
அபூதாலிப் சொல்லி நின்றதும்
தூது சொல்வதை விடு முஹம்மதே
என்று காடையர் சொன்னதுமே அதை
அபூதாலிப் சொல்லி நின்றதும்
ஒருகரம் சூரியரும் மறு கரம்
சந்திரரும் வந்திங்கு தந்தாலும்
எந்த நாயன் எனைப்படைத்தான்
அந்நாயன் வழிமீறேனென்றார்
சந்திரரும் வந்திங்கு தந்தாலும்
எந்த நாயன் எனைப்படைத்தான்
அந்நாயன் வழிமீறேனென்றார்
மக்கத்தில் தினம் நிகழும்
துக்கத்தை சற்றும் தாங்காமல்
பக்கத்தில் உள்ள தேசமெங்கும்
சொர்க்கத்தை எண்ணி போனாரே
துக்கத்தை சற்றும் தாங்காமல்
பக்கத்தில் உள்ள தேசமெங்கும்
சொர்க்கத்தை எண்ணி போனாரே
ஊரார் அங்கு வந்து
ஐந்தாறு பேர் என சிறு
குழுவாய் சேர்ந்து கல்லெறிந்தனரே
நபிகளாரும் கவலையில் திரரும்பினாரே
ஐந்தாறு பேர் என சிறு
குழுவாய் சேர்ந்து கல்லெறிந்தனரே
நபிகளாரும் கவலையில் திரரும்பினாரே
இறை வாக்கை காக்க வென
இர வோடு இரவாய் பிறந்த
மண்ணையும் வளர்ந்த
ஊரையும் துறந்து போனாரே
இர வோடு இரவாய் பிறந்த
மண்ணையும் வளர்ந்த
ஊரையும் துறந்து போனாரே
படுத்துறங்கிய பாயையும்
எடுத்தருந்திய பாகையும்
கொடுத்த வாக்கை காக்க -இறைவனுக்காய்
எடுத்தெறிந்து போனாரே
எடுத்தருந்திய பாகையும்
கொடுத்த வாக்கை காக்க -இறைவனுக்காய்
எடுத்தெறிந்து போனாரே
பிறந்த மக்காவை தோறந்து மதீனாவில்
புகுந்தாரே இஸ்லாத்து க்காய்
அர்ப்பணங்கள் கோடி புரிந்தாரே
அர்ப்பணமே சொக்கி நின்றதே
புகுந்தாரே இஸ்லாத்து க்காய்
அர்ப்பணங்கள் கோடி புரிந்தாரே
அர்ப்பணமே சொக்கி நின்றதே
No comments:
Post a Comment