Thursday, 25 January 2018

தகரட்டும் தலைக்கனம்

கெஞ்சிச்சாகாதே கேட்டதங்கிலை
தஞ்சம்புகாதே திராணி இல்லை
அடைக்கலம் கேட்காதே அன்பங்கிலை
கண்ணீர்சிந்தாதே நீயங்கு கணக்கிலிலை
நம்பிச்சாகாதே நட்பங்கு இல்லை
அழாதேயங்கு உனக்காய் எவனுமில்லை

தேவை வர தேடி வருவர்
தேவை முடிய ஓடி விடுவர்
தேடிப் போகையில் சாடி விடுவர்
தெரு நாயினும் கொடியவர்

நட்பங்கே நட்பங்கே யென
நாள் தோறும் நினைத்தாயே
நயவஞ்சமங்கே வஞ்சங்கேயென
நினைக்க மறந்தாயே! 

கூடி ப்பழகியதும் தேடி ப்பழகியதும்
நாடி வந்ததும் கோடி போய்யென
நொடி ப்பொழு தேனும் எண்ண
மறந்தாயே மட நாயே!

உனை உதறி எறிந்தவனை
உளறி கொட்டாதே - எண்ணியெண்ணி
அவன் அலறி ஓட எங்கோ
நீ பிளிறி ஆடு

குறுக்கே கோடி துயர் வரலாம்
வழக்கே யுனை மூடி விடலாம்
செருக்கு தலைக் கேறி ஆடாதே
வெடுக்கென கவலையில் வீழாதே

பார்த்தும் பாராமல் கண்டும் காணாமல்
கேட்டும் கேளாமல் பேசியும் பேசாமல்
போனாலவன் போகட்டும் போயெங்கோ சாகட்டும்
பேயெனென்றே பேராகட்டும் அவனகந்தை
இடிந்து தூளாகட்டும்

No comments:

Post a Comment