Wednesday, 24 January 2018

குருதியில் கொதிக்கிறது குத்ஸ்

தெரு வின் இரு மருங்கில்
அரு வங்களாய் சடல ங்கள்
இளமை பரு வங்களில் இலட்சத்தில்
இளைஞர் உடல ங்கள்
 
உரு மாறிப் போய் பெரும்
ஊரே நாறிப் போய் பெரும்
பாரே பாராமல் காணாமல் போகும்
ஊராமோ எங்கள் குத்ஸ்

தீண்டி யிழைத்த கொடுமை
தூண்டிலிட்டு பிடித்த நிலமை
கூண்டிலி லடைத்த கயமை
மீண்டெ ழுமாமோ குத்ஸ்
காஸா மணலில் நடக்கும் மங்கையர்
கருக்களின் உருக் களிலே குத்ஸ்
எம்முயிரென இரும்பு ருக்காய் உருக்கி
ஊற்றி பருக்கியே இருக்கிறோம்

இள நெஞ்சமும் அஞ்சாது
கிழ நெஞ்சமும் அஞ்சாது
அஞ்சும் நெஞ்சமென சொல்ல
அங்கு கொஞ்சமேனும் எஞ்சாது

ஆண்டுகள் ஆயிர மானாலும்
ஆண்டிடும் ஆட்கள் மாறினாலும்
ஆண்டானடிமை முறை மீண்டாலும்
ஆண்டுக்காயிரம் யுத்தம் மூண்டாலும்

காகிதங்களில் எழுதி கையெ ழுத்திட்டு
கதைகள் கட்டி காரணம் காட்டி
குற்றவாளி நீயென கை நீட்டி
எம்மை கூண்டுகளில் அடைத்தாலும்

ஏய் நெதன்யாஹு!!!!!!!!!

நீதலையால் நட காலால் குடி
வாலால் தொங்கு முதுகால் பார்
என்ன வேண்டு மானாலும் செய்துகிழி
கிழித்துமுடி செத்து மடி

குத்ஸ் எங்களது தான்
என்றும் யுத்த களம்தான்
வென்றெ டுப்போம் குறுக்கிட்டால்
கொன் றொழி ப்போம்




இதயத்தில் இருக்கிறது குத்ஸ்
நாக்கினில் தவிக்கிறது குத்ஸ்
சிந்தனையில் மிதக்கிறது குத்ஸ்
குருதியில் கொதிக்கிறது குத்ஸ்

No comments:

Post a Comment