சொல்லழகில் சொர்க்மென
வில்லழகாய் வளையெழுத்துக்களே
அணியழகில் கனிவர்க்கமென
பிணியேறா கலைக்ற்பனைகளே
வில்லழகாய் வளையெழுத்துக்களே
அணியழகில் கனிவர்க்கமென
பிணியேறா கலைக்ற்பனைகளே
மொழியழகை விழியழகென
தமிழினை கவிதனில் பொழிவோமே
கவிமழைகளில் தமிழினை
அள்ளும் அமுதென சொரிவோமே
தமிழினை கவிதனில் பொழிவோமே
கவிமழைகளில் தமிழினை
அள்ளும் அமுதென சொரிவோமே
நீடு காலம் நாடு ஆண்டு
ஓடும் பழமை தேடும்போது
மூடுண்டு பீடுநடை போடும் நீ
கோடிபுகழ் கொண்ட தமிழே
ஓடும் பழமை தேடும்போது
மூடுண்டு பீடுநடை போடும் நீ
கோடிபுகழ் கொண்ட தமிழே
ஆளுந் தமிழாய் அன்று நீ
அலங்காரம் கொண்டாயோ
வாடுந் தமிழாய் இன்று நீ
வதங்கி நின்றாயோ
அலங்காரம் கொண்டாயோ
வாடுந் தமிழாய் இன்று நீ
வதங்கி நின்றாயோ
நாளை உனை நமதுலகு
நாடி வந்து நற்றமிழங்கேயென
தேடி அலைந்து கோடி நாள்
தவங்கி நில்லாதோ
நாடி வந்து நற்றமிழங்கேயென
தேடி அலைந்து கோடி நாள்
தவங்கி நில்லாதோ
தேமதுரம் உதிரம் பெற்று
உணர்வும் சேரப்பெற்று
உருவங்கொண்ட கர்வமிலா
தேன் மதுரைத் தமிழே
உணர்வும் சேரப்பெற்று
உருவங்கொண்ட கர்வமிலா
தேன் மதுரைத் தமிழே
மதியுங்கெட்டு நாதியுமற்று
பீதியுமுற்று ஜோதியுமற்று
வீதியில் திரிவாயோ -மேதியென
அலைவாயோ வாவியுள் நுழைவாயோ
பீதியுமுற்று ஜோதியுமற்று
வீதியில் திரிவாயோ -மேதியென
அலைவாயோ வாவியுள் நுழைவாயோ
வீறு கொண்டு சூடிக்கொண்ட
ஈழமென்ற பேரொன்றுண்டு
தமிழே நீ வாழவே இன்னும்
வந்திங்கு குடிகொள்ளு
ஈழமென்ற பேரொன்றுண்டு
தமிழே நீ வாழவே இன்னும்
வந்திங்கு குடிகொள்ளு
No comments:
Post a Comment