என்னருமைத் தோழியே
தினம் தினம் நீ வாசியே
பல மனித மனங்களில்
பல புதினங்கள் காண்பாய்
நீ வாசியே
சப்தங்களெல்லாம் பேச்சுக்களாகாது
ஏனெனில் ஊமை கூட சப்தமிடுவான்
பேச்சுக்களெல்லாம் அறிவாகாது
ஏனெனில் பாமரன் கூட பேசுவான்
கோடுகளெல்லால் எழுத்துக்களாகாது
ஏனெனில் வேடன் கூட கோடிடுவான்
எழுத்துக்களெல்லாம் மொழியாகாது
ஏனெனில் சூனியக்காரன் கூட எழுதுவான்
ஆனால் வாசகனுக்கு பேசவும் தெரியும்
சப்தமிடவும் தெரியும் அறிவும் தெரியும்
அறியவும் தெரியும் கோடும் தெரியும்
கோடிடவும் தெரியும் எழுதவும் தெரியும்
மொழியும் தெரியும் வாசிக்கவும் தெரியும்
யோசிக்கவும் தெரியும்
சாதிக்கவும் தெரியும் சமாளிக்கவும் தெரியும்
அதனால் வாசி தோழியே
புத்தகங்கள் நிறைந்த தேசத்தில்
வாசகன் இல்லாமலிருக்கலாம்
ஆனால் வாசகர்கள் நிறைந்த தேசத்தில்
புத்தகங்களில்லாமல் ஒரு தேசமும் இருக்க முடியாது
தோழியே வாசிப்பால்
உன்னை அறிவாய்
உன்னோடு உள்ளவரை அறிவாய்
உலகைக்கூட அறிவாய்
ஆனால் உன்னை நீ வாசித்தால்
உலகமே உன்னை அறியும்
வாசிக்கத்தெரியாமல் வாழ்ந்தென்ன?
வாழ்ந்தோரெல்லாம் வாசித்திருந்தால்
உலகமே அவர்களை இன்று வாசிக்கும்
ஆனால் வாசிக்க தெரிந்தும் வாசிக்காமல்
இருப்பதை காட்டிலும் உயிரோடு சுடுகாட்டில்
சுடுபட்டு சாவது மேல்
என்னருமைத்தோழியே
நீ தினம் தினம் வாசியே
பின்னாளில் உலகமே
உன் பேரை வாசிக்குமே
வகுப்புத்தோழியின் கோரிக்கையில் விளைந்த கதிர்
No comments:
Post a Comment