பல்லின மெல்லாம் என்றுமி லங்கையில்
நல்லி ணக்கம்பேணி ஒருங்கு கலந்து
கொல்லி வனை எனும் சொல்லினைக்கூட
வில்லினால் எய்து கொல்வோம்
தெருவோரம் எவரேனும் நடந்து போனாலும்
பரிவாரமாய் சேர்ந்து பழித்து பரிகசித்திடாமல்
பரிவோடு பழகி பிரிவோடு போகையில்
கனிவோடு கண்ணீர் சிந்துவோம்
சிங்களரும் தமிழரும் சோனகரும் சினந்திடாது
யாம் யாவரும் இலங்கை த்தாய் மைந்தரென
கலை விழாவில் இலங்க வைத்தார்
யாவரையும் இணங்க வைத்தார்
இனமுறுகல் கேடு இனி புன்முறுவலை தேடு
பிணமானது வீடு மணமாகட்டும் நம்நாடு
நீக்கிடு நெஞ்சங்களில் பிழையென வரைந்தகோடு
நீக்கினாலென்றும் சந்தோசக் காடு
இதைச்சொல்ல மிஹ்ளார் சேர் பட்டபாடு
கலைவிழா முடியுமட்டும் புகைந்தது மனக்கூடு
முடிந்ததுமே இறைதுதி பாட சிரம் புதைத்து
வணங்கி கரமேந்தி நன்றிநவின்றாரே
நாடகமாட நாம் வந்திங்கு காண
வகை தொகையின்றி ரகம் ரகமாய்
புதுசுவை ரசமாய் நாவிற்கு வசமாய்
ஆகாரங்கள் அள்ளி ப்படைத்தார்
புசித்து புசித்தே பசியென்ற ஒன்று
இல்லை யென சொல்லும் அளவும்
விருந்தோம்பல் செய்து இனியும் புசித்திருந்தால்
மருந்தகமே நாடி இருப்போம்
கனிவும் பணிவும் கொண்ட அலிக்கும்
இனிமையும் துணிவும் கொண்ட அர்பகானுக்கும்
பேரன்பும் பெருவரவேற்புமளித்த மிஹ்ளார் சேருக்கும்
பெயர்தெரியாத பெண்குல பெருந்தேவிகளுக்கும்
கூட்டிவந்த தோழன் நாநா நபீஸுக்கும்
கூட்டிணைந்தநம் தோழருக்கும் கோடிநன்றிகள்
ஏற்பாடு செய்து மேற்பார்வை செய்து
தப்பேதும் தவறியேனும் வந்திடாது
குழப்பங்கள் கோளாறுகள் நிழ்ந்திடாது
தர்பியா இஸ்லாமியாவிற்கும் நன்றிகள்
நாடகக்குழு நாடாளுங்குழு
நாலாபுறமிருந்து இணைந்து
நளீமியாவில் நடப்பட்ட
நடிகர்திலகங்களின் நவ வடிவம் நாமே
அவர்களின் நாமங்கள் கீழே
Fasmin jaafar
Ifaz iqbal
Ahnaf jazeem
Aashik zahran
Faizal fareed
Rila riyaldheen
Farsan hazar
Nafees muzammil
Haseef
Mafas
Ibrahim
Sajith salman
Saud saif
Sarjoon Salahudheen
sadan naseers
Shamil
No comments:
Post a Comment