பற்றி தொற்றி ஏறி யொட்டி
உடலின் உதிரம் உறிஞ்சும்
மலை அட்டைகள் பல ஏற
தட்டிவிட்டு தானே நடந்தோம்
பச்சிலை களாயிரம் கூடி அமைத்த
நற்சோலை யிலாயிரம் அழகு ஒழுக
கற்களிலே கணக் கின்றி நடந்தோம்
குளிரில் மேனி குளிர்ந்தோம்
மிளகு கொக்கோ வெற்றிலை இலவு
மரஞ்செடிகொடி சாதிக்காய் கண்டோம்
கரும்பாறைவழி நீரோடுந்தருணம்
காலெமது நனைத்து றைந்தோம்
தம்பி ஆசர் வழி காட்ட
அண்ணண் தாரிக் பேச்சால் அழகுக்கே
மெருகூட்ட நானும் மலைக்குறிஞ்சி
பாடிய கபிலரோடு கலந்துவந்தேன்
ஈரச் சருகில் ஏறிப் போகையில்
தூரச் சறுக்கி நிலங்கீறி விழுந்தேன்
இறங்கிப்போகையில் தூறிப்பாய்ந்தேன்
மீறிப்போனால் மரணம்
சோறும் கோழிக்குழம்பும் வதக்கல்
கத்தரியும் பருப்புச் சாதமும் பப்படமும்
பகிர்ந்தே புசித்து பகலு ணைவை
உண்டு நன்றியுஞ் சொன்னோம்
வளைவு களிலும் சரிவு களிலும்
காணும் அழகுகளின் புதைந்தேன்
அக்குறையின் எழில் அமைதியெனை
கவியெழுதி தீர்க்கச்சொல்கிறது
No comments:
Post a Comment