என்ன வண்ணம்
கற்பனையா கனவா என்னவென
சொல்லும் என் எண்ணம்
தோற்குமடா அழகு அன்னம்
என்ன கன்னம்
வெள்ளிக்கிண்ணமா துவக்கு சன்னமா
என் எண்ணமதில் இதில் எதுவென
ஏதாவது ஒன்று பிரசன்னமாகுமா
என்ன கண் கருவிழி
சொல்ல ஏது மொழி
என்ன மொழியில் மொழிவேன்
வண்ண முகமிதை
குதலை மொழி பேசும்
மழலை இவன் எழிலை
முகமயலை உடைமயிலை
வர்ணிக்க அணிகளேது
காண்போரே கண்டதும்
கண்கொண்டதும் கண்பட்டிடாதீர்
கண்ணூறு கொட்டிடாதீர் இவனுக்காய்
பிரார்தித்திடுவீரின்று
No comments:
Post a Comment