Tuesday, 31 October 2017

ஐந்திணை ஐந்தினை கடத்தல்

நிலம டந்தை யதை வாரும்
கலப் பையே ரோடு ஊறிக்
கலந் தோடும் களியிற் சீறும்
நெல்லுள மருதம் கடந்து

மலங் கிடந்து பயமேற் படுத்தும்
மலை யெனத் தென்படும் வாரண
சோலை யிதோடு வானரந் தாவு
மயிலாடு முல்லை கடந்து

கலமே றிஇர வினிலே வலைவீசி
நிலமே றிஇரவி கனவொளி  வீசி
வளமீனும் வாளை சுறா போலநாளும்
வளமுள நெய்தல் கடந்து

தெங்கு நுங்கு கடற் சங்கு
அங்கு மிங்கு மென எங்கும்
கிடக்க வீசுந் தென்றலிலே வெளிவரும்
மணற் பாலை கடந்து

வா னோங்கி வளர் தருக்களும்
தே னதைதேங்கி யுயர் மலைகளும்
தீ நதிதூங்கி விழும் பாறைகளும்
தெரியும் குறிஞ்சி  கடந்து

நெல்லும் நீர் வில்லுமுள மருதமும்
புள்ளும் போர் வில்லுமுள முல்லையும்
வள்ளமும் வான வில்லுமுள நெய்தலும்
கல்லும் கூர் உல்லுமுள பாலையும்
செல்லும் வழியெல்லாம் மலையுள குறிஞ்சி
எனச் சொல்லும் ஐந்திணை ஐந்தினையும்கடந்தேன்

#மருதம்_முசலி
#முல்லை_வில்பத்து
#நெய்தல்_புத்தளம்
#பாலை_நுரைச்சோலை
#குறிஞ்சி_மலையகம்
#ஐந்திணை_ஐந்தினையும_கடத்தல்

No comments:

Post a Comment