Tuesday, 31 October 2017

கருக்கல் கலைகிறது

மயிர் சிலிர்க்க பயிர் செழிக்க
உயிர் விறைக்க குளிர் நிறைக்க
பலர் சிகை சிலிர்க்க சிலர் முகம் நகைக்க
பகலவன் பனிப்படையதை கலைக்க

வைகறையிலே கருக்கல் மறையும் தருணம்
வையத்தையே இரசிக்கயிலே சில்மியாபுர
செழுமையதை மலைமீது அமர்ந்து கவிவடிக்க
இடைமறித்து படமெடுத்தார் பழகியதோழர்

பாம்பொன்று படமெடுத்தால் பழி தீர்க்குமே
பாங்கர்கள் இங்கு படமெடுத்ததால் பாங்கன்
நான் என்பங்கிற்காய் பழி தீர்க்கிறேன்
பாவாக்கி நற்றமிழ்  பூவாக்கி

சிகை -நெற்றி மயிர்
வைகறை -விடிகாலை
கருக்கல் -விடியும் தருணம் இருள் நீங்கு தருணம்
பாங்கன் -நண்பன்

#அஸ்ரக்_சப்ராஸ்_சில்மி_மிஸ்பாஹ்_படமெடுத்த_பாங்கர்கள்
#சில்மியாபுரம்_பொரகஸ்கெடிய_நுவரெலியா

No comments:

Post a Comment