Saturday, 14 October 2017

ஊர்களின் பெயர்களின் பொருள்கள்

புத்தூர்- புதிய ஊர்


மூதூர்-பழைய ஊர்


பேரூர்- மாநகர்


பட்டி-கால்நடை தொழுவமுள்ள சிற்றூர்


பற்று- தனிப்பட்டவருக்கு ஒரு சாராருக்கு உரிய ஊர்


அடங்காப்பற்று- அரசாணைக்கு அடங்காதவர் வசிக்கும் ஊர்


பள்ளி- மடலாயங்கள் உள்ள ஊர்


பாளையம்- படையிருக்கும் ஊர்


பட்டு-சிற்றரசருக்குரிய ஊர்


குடி-ஒரு குலத்தார் வசிக்கும் ஊர்


குடியேற்றம்-மக்கள் குடியேறிய ஊர்


குடிக்காடு-குடிகள் வசிக்கும் காட்டூர்


கல்லாங்குத்து-கடின நிலத்தூர்


முரம்பு- கற்பாங்கான மேட்டு நிலத்தூர்


எயில்-மதில் சூழ்ந்த ஊர்


புரம்/புரி-அரசர் தலைநகர்

பேட்டை-சந்தை கூடும் ஊர்

No comments:

Post a Comment