இன்ஸாப் ஸலாஹ்தீன் அவர்களின் ஒவ்வொரு பொழுதில் ஒவ்வொரு வாழ்கை எனும் கட்டுரை தொகுதி நூலுக்கு பின்னரான இரண்டாவது கட்டுரைத்தொகுதி நூலான இலையில் தங்கிய துளிகள் எனும் நூல் பொன்னிற் பதித்த மரகதாமாய் அதை சுவைப்பார் மனங்களில் பதித்துவிடுகிறார் நூலாசிரியர்.
இந்நூல் உணர்வலைகளையும் அனுபவங்களையும் ஒருசேர ஒரே நூலில் கோர்த்து ஒரு உணர்வுச்சசரங்களின் ஆரமாக சூடியதும் சூட்டியதும்தான் இலையில் தங்கிய துளிகள்.
வாசகரின் உள்ளங்களை அள்ளியெடுத்து கொள்ளை கொள்ளும் வெள்ளை முல்லை மலராய் எம்முன்னே கண்முன்னே சுண்டியிழுக்கும் தமிழிலக்கியத்தின் பேரிலக்கியம்தான் இலையில் தங்கிய துளிகள்.
உணர்ச்சிப்பெருக்கின் பின்னல்களை பின்னியெடுத்து அனுபவங்களால் புடமிட்டு அழகுற வண்ண, வன்ன படமிட்டு யாத்தெடுத்த இந்த இலையில் தங்கிய பனுவல் வாசிப்போரை அழவும் கிளர்ந்தெழவும் சிலவிடங்களில் கவலைகளில் விழவும் எம்மை அறியாமலே நுழைவிக்கிறது.
உரைநடையில் இலகுநடையில் உள்ள இந்நூலில் அணிந்துரையை அனார் வழங்கி இருக்கிறார்.மேலும் அட்டை வடிவமைப்பு அல்லது தளக்கோலம் அஸார் வஸீர் செய்திருக்கிறார் மற்றும் நிகழ் பதிப்பகத்தால் அதியுயர் தொழிநுட்பத்தில் ஒறுப்பான சோக்காளியான செலவில் அச்சிடப்பட்டுள்ளது.
முன்னட்டையின் அழகையும் எழிலையும் ரசிக்க தனியே நேரமொதுக்கவேண்டும் அத்தனை வனப்பு மிகுந்தது ஒரு கருங்கற் பாறையில் ஒரு கடப்பாரையால் தாக்கியது போலவும் காற்று நீர் கடல் என்பவற்றின் தாக்கத்தில் அரிப்புற்று சிதறிய சிதிலங்கள் போலவும் படிக்கட்டு போன்ற சாலக அமைப்பிலும் அப்பாறையில் துளியென நீர் கரைந்திருப்பது போலவும் வடிவமைத்திருக்கிறார்.என்றாலும் அட்டைப்டத்தின் நிறமும் கடுந்நிறமாக இருப்பதால் புத்தகத்தின் தலைப்பை துரிதமாக பார்க்கும் போது அலாதியாக தெரியாமல் இருப்பது என் கண்ணில் கோளாறு திருத்தப்படவில்லையோ என எண்ணத்தோணுகிறது.
இந்நூலில் அணிந்துரை தவிர்ந்து பதினைந்து கட்டுரைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் வாழ்வின் ஒவ்வொரு இடத்தையும் தருணத்தையும் உறவையும் பயணத்தையும் அசைவையும்
செயலையும் பண்பையும் சுற்றி பவனி வந்து கொண்டிருக்கின்றன.
செயலையும் பண்பையும் சுற்றி பவனி வந்து கொண்டிருக்கின்றன.
நூலாசிரியரது எழுத்துப்பாணி கட்டுரையை உதாரணங்களுடனும் தத்துவங்களுடனும் கவிதைகளுடனும் தொடங்கும் பாங்கு கவிக்கோ அப்துர் ரஹ்மானின் பூப்படைந்த சப்தங்கள் எனும் நூலை வாசிப்பது போலவே ஆனந்தத்தை அள்ளிச்சொரிந்தது.
இந்நூலை வாசிக்கத்தொடங்குவது விமானத்தில் ஏறுவது போல் விமானம் தரை இறங்குவதோடு பயணம் நிறைவுறுவது போல் வாசித்து முடியும் வரை எம்மை காற்று வெளி இடையில் ஆகாயத்தின் அந்திரத்திலும் அத்தாயத்திலும் மிதந்து கொண்டே கூட்டிச்செல்லும் வல்லமை வாய்ந்தது.
விடுபட்ட வார்த்தைகளில் முதல் நூலுக்கும் இந்நூலுக்கும் இடையில் விடுபட்ட நூலாசிரியரின் வார்த்தைகளை செதுக்குகிறார்.
சுவர்களோடு பேசுதலில் வயோதிபம் முதுமை நரை எனும் மூத்தோரின் சிறப்பையும் இழப்பையும் துயரையும் மனக்கண்முன் கொண்டு நிறுத்துகிறார் நூலாசிரியர். முதுமை நோயல்ல அது ஒரு பருவம் எல்லோருக்குமுண்டு என சொல்கிறார்.
சுவர்களோடு பேசுதலில் வயோதிபம் முதுமை நரை எனும் மூத்தோரின் சிறப்பையும் இழப்பையும் துயரையும் மனக்கண்முன் கொண்டு நிறுத்துகிறார் நூலாசிரியர். முதுமை நோயல்ல அது ஒரு பருவம் எல்லோருக்குமுண்டு என சொல்கிறார்.
இன்னும் கொடுக்காத பரிசில் பல உதவிகளையும் ஏன் ஆறுதல்களையும் நாம் இன்னும் எம் பிரியர்களுக்கு கொடுக்காமலே இருக்கிறோம் அன்பின் அளவை பொறுத்தே பரிசும் வேறுபடும் சிலரின் அன்பிற்கு நாமேதான் பரிசாகிறோம் அவர்களின் பிரிவில் மனதால் சாகிறோம்.
விடை பெறும் தருணங்களிலே நாமுறும் இன்ப துன்ப முரண் உணர்வுகளையும் தற்காலிக நிரந்தர விடைபெறுதலின் வலிகளையும் சுவைகளையும் சுவை மிகைக்கவே இயம்புகிறார். காற்றில் கையசைத்து பயணம் செல்லும் தொடரூந்தின் தொடரான அனுபவங்களையும் உணர்வெழுச்சிகளையும் தெள்ளத் தெளிவாக வர்ணிக்கிறார்.
மழையில் நனையும் மலையில் மலையின் சிறப்பு வியப்பு திகைப்பு என எல்லா பாடைப்பையும் அத்தோடு எழுத மறந்த கடிதத்தில் கடிதம் இன்று மக்களால் மறந்துவிட்ட ஒன்று என்றும் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழில் திருமண பந்த சுவைகளையும் சுமைகளையும் இதையத்தின் ஓரத்தில் கிழிசல் ஏற்படுத்தாமல் வாழ திருமணம் உதவும் என்கிறார்.
இருப்பதற்கு வருகிறோம் இல்லாமல் போகிறோம் எனும் கட்டுரையில் மரணம் பற்றியும்
வாழ்க்கை எழுதும் கவிதை எனும் கட்டுரையில் குழந்தைகள் பற்றியும்
பச்சை இலை கறுப்பு நிறம் எனும் கட்டுரையில் தேயிலை தொழிலாளர்கள் பற்றியும் கடந்த காலத்தின் சித்திரங்கள் எனும் கட்டுரையில் கடந்த கால தற்கால வேறுபாடுகளையும் பழங்கால உயிர்ப்பான வாழ்வையும் கொண்டாடா வாழ்க்கை எனும் கட்டுரையில் மாற்றுத்திறனாளிகள் பற்றியும் மன நோயாளிகள் பற்றியும் கொங்ரீட் காடுகளில் தொலையும் வாழ்க்கை எனும் கட்டுரையில் நகரின் நரக வாழ்வு பற்றியும் இறுதியாக இலையில் தங்கிய துளிகளில் ஒன்பது துளிகளாக தனது ஒன்பது அனுபங்களையும் சுவாரசியமாக எழுதுகிறார். அதில் துளி நான்கில் மனிதப்புனிதர் குணசிறி அவர்கள் பற்றியும் அவர் சிலாகித்து புகல்கிறார்.

சுருக்கமாக சொல்வதாயின் நூல் மிக அருமையாக அமைந்திருக்கிறது எனினும் நான் வாசிக்கும் போது சில அச்சுப்பிழைகளும் பல எழுத்துப்பிழைகளும் ஒரு சில இடங்களில் பொருந்தாத சொற்களின் உபயோகம் எனது வாசிப்பை இடை இடையே இடை நிறுத்தியது அந்த வகையில் அவைகளையும் குறிப்பிடலாம் என நினைக்கிறேன்.
தோள் என்பதற்கும் தோல் என்றும் பரிமாறி என்றும் என்பதற்கு பறிமாறி என்றும் கணம் என்பதற்கு கனம் என்றும் பீரிடு என்பதற்கு பீறிடு என்றும் பதற்றத்திற்கு பதட்டம் என்றும் தொழிலாளி என்பதற்கு தொழிலாலி என்றும் பறித்து என்பதற்கு பரித்து என்றும் வலம் என்பதற்கு வளம் என்றும் கானம் என்பதற்கு காணம் என்றும் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
சுவாரஷ்யம் குறையாத என்பதற்கு சுவாரஷ்யம் குறையாக என்றும்
மலைகளின் உயரத்தே இருந்து சுற்றுப்புறத்தை பார்ப்து என்பதற்கு பதிலாக சுற்றத்தை பார்ப்பது என நூலாசிரியர் எழுதி இருக்கிறார் .ஆனல் சுற்றம் எனில் குடும்பம் அதாவது இயற்கை குடும்பம் என வலிந்து பொருட்கொடுத்தாலும் அவ்விடத்தில் அப்பதம் பொருத்தமற்றது எனும் என் கருத்து பெரும் இலக்கிய ஜாம்பவான்களிடம் எம்மாத்திரமோ?

பெயராக கறுப்பு என்றும் பண்பாக கருமை என்றுமே பயன்படுத்த வேண்டும் ஆனால் இங்கு பெயராக கருப்பு என்று பயன்படுத்தியது எனக்கு சிற நெருடலை கொடுக்கிறது. என்றாலும் இவைகளை விமர்சிக்க தகுதியற்றவன் நான் என்றாலும் என் உள்ளத்தில் எழுந்தவைகளை எழுதிக்கொட்டிவிட்டேன்.
இலையில் தங்கிய துளிகள் எல்லோராலும் எல்லா வயதினராலும் வாசிக்கப்பட வேண்டிய மிக அருமையான நூல்.
வாழ் வளம் பெறுக எழுக. என்றென்றும் விடாது எழுதுக.
good evaluation and critical perceptive
ReplyDelete