Sunday, 20 August 2017

ஜஃபர் பெரியப்பா

விமானம் பறக்க
விழியதோடிருக்க
விண்ணோ மறிக்க
அப்பாலும் விழிதொடர
காத்திருக்கிறாய்

கலங்காதே பிரியனே
கவலையது கனத்தாலும்
காதலன் காவலன்
மீண்டு வருவான்
மீண்டும் வருவான்
அப்பொழுது ஆண்டிடுவாய்

அருட்பேறாய் வரப்பேறாய்
பெற்றாய் நீயுன் பெற்றவரை
நீ நற்பேறு பெறவே கடல் கடந்து
வானில் மிதந்து போகிறாரே

என் அன்பின் பெரியப்பா
உன் பேரன்பின் பேரப்பா
அவரே உன் அன்னையின்
உயிரப்பா ஜஃபர் பெரியப்பா


No comments:

Post a Comment