Sunday, 11 June 2017

வடியாத வெள்ளமும் கண்ணீர் வடிக்காத உள்ளமும்

காட்டுமரம் வீட்டிடையே
வீட்டறையோ காட்டிடையே
நாட்டுமக்கள் யாவரும் மிதக்க
போட்டதனில் அகுரஸ்ஸை வெள்ளம்

கறி சோறு பொதியாகவே
சுரி சேறு விதியாகவே
தெரு மீது களியாகவே -போர்வையை
வெள்ளக்காடாய் காணவே

அள்ள அள்ள சுரக்கும்
அள்ளிய பின் மீதி இருக்கும்
அதைக்காணயிலே வெறுக்கும்
அக்கூளம் கிளரயிலே பைய
கட்டெறும்பு காலை நறுக்கம்

சேறதனுள் ஊறிய
காலில் ஏறிய கல்லிற்கு
உயிருண்டெனில் காறியுமிழ
தோணியெழும் எண்ணம்

ஆறு கடல் சீறியெழாமல்
ஆறி அடங்கு மெனில்
வீடு கடை நாடு நகர் யாவும்
கூடியழுமோ? கூவியழுமோ?

சாரை போன சந்து வழியும்
கூரையோடு மோட்டு வழியும்
நீரைப்பாய்ச்சி அலறியடித்து
ஊரை ஓடச்செய்த ஆறே சற்று ஓடி ஒழி

காலும் தோலும் அரிக்க
மேலும் கீழும் இழுக்க
மேலும் தோலும்  சிவக்க
நாளும் பொழுதும் முடியும்

வீடதை ஊடறுத்து
காடு வரை கோடிப்பொருளை
கொண்டு சேர்த்த ஆறே உன்
கும்மாளமதை கொஞ்சம் நிறுத்து

வாங்கி வைத்த
வண்ணச் சேலையெல்லாம்
வெள்ளச்சாலையிலே
மணப்பெண்ணோ இங்கு
எண்ணக்கவலையிலே

வணங்கி தொழும்
வல்லவனையே நம்பி
வடியாத வெள்ளத்திலும்
விடியாத நிலத்திலும் -கண்ணீர்
வடிக்காமலிருந்தாள் மணமங்கை

என்ன நான் சொல்ல
எண்ணவே இல்லை -பத்து
எண்ணுவதற்குள் பொருட்கள்
யாவும் வீட்டில் இல்லவே இல்லை

சரி உள்ளதை அள்ளியெடுப்போமென
தீர்மானம் எடுக்கயிலே
நீருக்குள் வீடு தெரியவே இல்லை
என்றான் என்னவன் ரினாஸ்

காரிருள் சூழ கருமுகில் மேலே
ஓரிரு துளி வளியில் வீழ -அருகே
மெழுகுதிரி காகிதம் மீது விழ
வந்தானொருவன் வதைதந்தானவன்
வார்தையால் சிதைத்தானவன்

ஏதேதோ பல்லாயிரம் கதைத்தானவன்
ஏளனமாய் ஏதோ சொன்னானவன்
தொலைபேசியில் தொலைதூரம் போனானவன்
அரை நொடி போகயிலே
அருகில் நின்றானவன்

அவனை வழியனுப்பி முடிக்கையிலே
விழி பிதுங்கியது எமது
புரியாமல் பேசுகிறான்
பெரும் வணிகன் போல் கைவீசுகிறான் யாரவன்?
என்றேன் எம்மூர் விகடகவி
நஸ்ரின் அவன்தான்
என்றாளவள் ருஸ்தியா

காற்றோடு கலக்குது நாற்றம்
ஊற்றோடு கலக்குது உதவாத
பொருட் கூட்டம்- சேற்றோடு
சிறு எறும்பு கூட்டம்

ஒருவார குப்பைகளை
தெருவோரம் கொட்டியது போல்
பொருளாயிரம் கறலேறி
கருநிறமாகி கிடக்குது

மாந்தர் கூட்டம் துவைப்பதும்
துடைப்பதுமாய் ஓட்டை வீட்டை
அடைப்பதுமாய் உதவாக் கோப்பைகளை உடைப்பதுமாய்
நீரும் சேறும் கொஞ்சிப்பேச
அதுவே மேனியெங்கும் பூச
உடலே கூச பணிபுரிகின்றனரே!

தோல் கிழிந்து
மேல் மெலிந்து
முகம் நலிந்து - மொத்தமாய்
பொலிவிழந்து

துணிவோடு களமிறங்கி
பணிவோடு பணிபுரியும்
என் நண்பன் ரினாஸிற்கு
கனிவோடு என் ஆறுதல்கள்

வெலிகமயில் நான் வந்திறங்கிய
வேளையிலே எம்மை அழைத்து
நல்லமீன் கேட்டு மீனவன் சொன்ன
விலை  கூட இன்ன விலையெனில்
சொன்தை தாருங்கள் எனக்கேட்டு

மூச்சிரைக்க முச்சக்கரவண்டியில்
கூட்டிவந்த மூத்த மச்சான்
முன்தினமே நாட்டிற்கு வந்த
நம்மச்சான் அப்துஸ் ஸமீயிற்கு
என் நன்றிகள்

உணவுக்கு பஞ்சமென்றாலும்
நெஞ்சு நிறைய ஆகாரங்கள்
அளித்த ரினாஸின் அன்னைக்கும்
என் கோடி நன்றிகள்

No comments:

Post a Comment