வரை முனைகளில்
சிறை விலக்கும்
இருட் கரங்கள் - ஒளி வீசும்
அருட் சரங்கள்தாக்கும் பெரும் மரங்கள
வானக் கன்னச் சிவப்பில்
மங்கையரைத்து மஞ்சள்
தோய்த்ததுவாய் - செம்மஞ்சள்
அழகு முகத்தில் நாண்டிடும்
நான்கைந்து மயிர்களென
தெருமரங்கள் கருமை ஏறிடுமே!!
குறுக்கு மறுக்காய் ஓடும்
குளிர் நதியும் நீலப்பசிய
மஞ்சள் பாய்ந்து வானைப்
பிரதிபலித்து பிம்பம் காட்டுமே!!
சொண்டிணைத்து – மேனி
அணைத்து கூட்டிடையே
குடி கொண்ட குருவியிரண்டும்
கொஞ்சம் சிறகடிக்க
மயிர் சிலிர்ப்பி மஞ்சள் பகலவன்
தங்கத் திலகமாய் மங்கிப்பின்
மிளிர்வான் - தங்கிய பட்சியாவும்
தங்கள் துணையோடு உணாத்தேடி
உலாவிடுமே !

புல் நுனியில்
பனித்திடும் பனி
தனித்துளியென பிரிந்து
நழுவி விழுகையில்
நனையும் தரை
வைகறை வெயில் ஒளியில்
வாள் முனையென மின்னிடும்
அழகு ஆயிரம் அத்தனையும்
ஆண்டவனையே துதிபாடிடும்
வரை – மலை
சரம் - அம்பு
உணா – உணவு
வைகறை – தினரம்பம் ( அதிகாலை )

No comments:
Post a Comment