Thursday, 27 April 2017

சொந்தம் வளர்கிறது

கற்பனைதனை விற்பனை
செய்யும் அற்பனையா காதலிக்கிறாய் அன்பு மகளே
எனத்தந்தை யுரைக்க

தந்தைக்குறைக்க தமக்கையவள்
தக்கபதில் சொன்னாள்
ஒப்பனைசெய்து கற்பதனை
விற்பனை செய்யும் மாதரிடம்

நாடிப்போகும் தகப்பனைவிட
நாறிப்பேரெடுத்த அப்பனைவிட
நாணிப்பெண் பெருமைபேணி
நல்லவனை மணப்பதுவே மருந்து

கற்பனைதனை விற்பனை செய்யும்
அற்பனையா?  என்று வினவினீர்
அவன் அற்பனல்ல கற்பனையால்
சொற்பனை வடிக்கும் கவிஞன்

முறைப்படிவந்து மூத்தோர்
முன்னமர்ந்து தன் விருப்பம்
முன்மொழிந்து முஹமதுநபி
வழி மணப்பவனா அற்பன்?

இல்லை இராப்பொழுதில்
இல்லத்தார் இனிதுறங்க
இல்லாள் அழகுதெரிய அருகிலுறங்க
அற்பக்காசுக்கு அலையும்

கன்னியரோடு கண்ணியமிழந்து
கண்டபடிபோகும் கயவன் அற்பனா?
என்று இப்பொழுது கண்டுகொண்டீர்
ஆண்டவனிடம் மன்னிப்பு வேண்டுவீர்.

தந்தையவன் தவறுக்கு வருந்தி
தன் மகளுக்குச்சொன்னான்
தற்பெருமைகொண்டு தரம்பார்த்து
தடுத்தேன் உன்னை

தரணியில் எவனும் தரமுயர்ந்தவனுமல்ல
தரமிழிந்தவனுமல்ல
தவறிழைக்காமலிருப்பவனே சிறந்தவன்

நீ அவனை முறைப்படி மண
நான் முறைப்படி சிறைபோவேன்
என்றதும்மகள் தவறுகள் ஆயிரமிருந்தாலும் தகப்பனை

மதிக்கச்சொன்ன மாநபி வாக்கை
மறந்திடலாமோ தவறொரு புறமிருக்க மறதி மறுபுறமிருக்க
இரண்டின் இடையில் படைக்கப்ட்டவன் மனிதன்

தவறுணர்ந்து தலைகுனிந்து
தரையில் கிடந்து இறைவனிடம்
மன்னிப்பு பெற்றிடுவோரை
மன்னித்திடுவான் இறைவன்

காலஞ்சுழல தந்தை நாளளெல்லாம்
பள்ளியில் தஞ்சம் புக - புது
தம்பதிகள் பந்தத்தில் இணைய
இஸ்லாமிய சொந்தம் வளர்கிறது

No comments:

Post a Comment