புழுங்கி வழிய வேர்வை
உருகி யொழுகி வழியும்
மெழுகாகி மேனி -விழியும்
அழுகி வடியும் ஊனாய்
வேகும் பயணம்
போகும் வேளை
நோகும் மனத்தில்
சாகும் வரமொன்று
வந்திடாதோ வென
சிந்தி வழியும் சிந்தனை
செந்தூர செக்கல் விழிமுன்
வந்தூர காணாமலதை
இடறாயிரம் இடையூறு
இடையூடு புகும் நேரும் -காணத்
தடையாக பலர் மறித்து
நெருக்கிட விலாவென்பை
நொருக்கிட நகரச்சூடு
நரகச்சூடென உருக்கிட
உடல் கருக்கிட வந்துவீசும்
தென்றலை சிலர் குறுக்கிட
பெருக்குடுக்கும் சினமதை
சிந்தையில் சுருக்கிட
அருகிலிருக்கும் பஸ்மினும்
முன்னிருக்கும் நாநா ரஸீமும்
உளங்குமுற சினங்கிளற
பற்கடித்து பொறுத்து
படபத்து பயணம்
தொடர்கிறது தொடருந்தில்
No comments:
Post a Comment