புல்லுச்சவளாமல்
மெல்லத்தரையில்- இளங்காற்றில்
நெல்லுச்சுமந்த பயிராட்டமுடன்
மெல்லத்தரையில்- இளங்காற்றில்
நெல்லுச்சுமந்த பயிராட்டமுடன்
நீர் நடந்து வருகையிலே
எம்மருகிலே பல்லுத்தெரிய
மெல்லச்சிரித்து சொல்லுச்சிதறாமல்
எம்மருகிலே பல்லுத்தெரிய
மெல்லச்சிரித்து சொல்லுச்சிதறாமல்
சலாத்தை அள்ளிச்சொல்லுவீரே
வானில் பறந்து தேனில் குழைந்து
மானில் விழுந்து கானில் மறையும்
உம் பேச்சிற்கு முதலென்பதோ
முடிவென்பதோ கிடையாது
பாடம் படிக்கையிலே -பலர்
பாடாய் படுத்துகிறாரிவர் எனச்சொல்லி
பாடத்தில் படுக்கையிலே நீர்
படிப்பிக்கையிலே நாம் நாளை
படிப்போமென்றிருந்தோம் இன்று
வாழ்கைப்பாடத்தையிழந்தோம்
நேரஞ்சுணங்கி நாம் வந்த
வேளையெல்லாம் வகுப்பிற்கு
வரவேற்று வந்தோருக்கெல்லாம்
வரவு வைத்து வராதோரை கேட்டு
விசாரித்து வருமாறு
வரச்சொல்லிவிட்டு நீர் போவீரே
உம் பாடத்தை பரீட்சைக்காய்
படித்து முடிப்பதற்குள்
உம் உலகப்பரீட்சை முடித்துவிட்டீர்
நானும் எழுதி முடித்துவிட்டேன்
பரீட்சையில் பதிலையல்ல உம்மை
தீயோரும் பேயோரும்
தீமைகளை மேயவரும்
நாயோரும் பேரண்டம்
நடுங்க உலகாண்டோரும்
தீயினில் விழுந்து
தீய்ந்து தேய்ந்து
பிய்ந்து காய்ந்து
போக மாடடாரோ?
என ஏழைக்குடிகள்
ஏங்கிடினும் வழ்வாரய்யா
உண்மைகள் உறங்கும் பாயவர்
நன்மைகளின் தாயவர்
முன்மாதிரி நாயகர்
மனத்தூயவர் உலகழியுமட்டும்
வாழவெண்டுமென எண்ணிவிடில்
சொல்லாமல் கொள்ளாமல்
கிடப்பில் கிடக்காமல்
எவரையும் துயர்படுத்தாமால்
இறையடி எய்திடுவாரய்யா
யோக்கியரே! உத்தமரே! - இனியுமை
பாக்கியம் பார்க்க எமக்கில்லை – உம்
வாக்கியம் செவிகளில் எதிரொலிக்கிறது
நோக்கி உமை இருப்பது போல்
தேக்கியிருக்கிறது உளம் உம்மை
செந்தூரமாய் செம்பருத்தியாய்
செஞ்சாய உடை சூடி
செங்கம்பள வீதிவழியே
செவ்வனே வந்தீர்
பட்டமளிப்பு விழாவில்
மறுநாள் மதியம் -என்
செவியில் பதியும் - உஸ்தாத்
ஹைருல் பஸரையும்
அழைத்தது விதியும்
புகுந்தார் இறைச்சந்நிதியும்
நாளை நாம் சுவனம் வருவோம்
அறிவோலை சகிதம் வருவோம்
அறிவுப்பாலை பருக வருவோம்
சீடர்களாய் எம்மை தருவோம்
பாடம் - ஸரஹ{ல் ஹதீஸ்
2017ஃ03ஃ17-பரீட்சை நாள்
2017ஃ03ஃ13- உலகபரீட்சை முடிவு

வானில் பறந்து தேனில் குழைந்து
மானில் விழுந்து கானில் மறையும்
உம் பேச்சிற்கு முதலென்பதோ
முடிவென்பதோ கிடையாது
பாடம் படிக்கையிலே -பலர்
பாடாய் படுத்துகிறாரிவர் எனச்சொல்லி
பாடத்தில் படுக்கையிலே நீர்
படிப்பிக்கையிலே நாம் நாளை
படிப்போமென்றிருந்தோம் இன்று
வாழ்கைப்பாடத்தையிழந்தோம்
நேரஞ்சுணங்கி நாம் வந்த
வேளையெல்லாம் வகுப்பிற்கு
வரவேற்று வந்தோருக்கெல்லாம்
வரவு வைத்து வராதோரை கேட்டு
விசாரித்து வருமாறு
வரச்சொல்லிவிட்டு நீர் போவீரே
உம் பாடத்தை பரீட்சைக்காய்
படித்து முடிப்பதற்குள்
உம் உலகப்பரீட்சை முடித்துவிட்டீர்
நானும் எழுதி முடித்துவிட்டேன்
பரீட்சையில் பதிலையல்ல உம்மை
தீயோரும் பேயோரும்
தீமைகளை மேயவரும்
நாயோரும் பேரண்டம்
நடுங்க உலகாண்டோரும்
தீயினில் விழுந்து
தீய்ந்து தேய்ந்து
பிய்ந்து காய்ந்து
போக மாடடாரோ?
என ஏழைக்குடிகள்
ஏங்கிடினும் வழ்வாரய்யா
உண்மைகள் உறங்கும் பாயவர்
நன்மைகளின் தாயவர்
முன்மாதிரி நாயகர்
மனத்தூயவர் உலகழியுமட்டும்
வாழவெண்டுமென எண்ணிவிடில்
சொல்லாமல் கொள்ளாமல்
கிடப்பில் கிடக்காமல்
எவரையும் துயர்படுத்தாமால்
இறையடி எய்திடுவாரய்யா
யோக்கியரே! உத்தமரே! - இனியுமை
பாக்கியம் பார்க்க எமக்கில்லை – உம்
வாக்கியம் செவிகளில் எதிரொலிக்கிறது
நோக்கி உமை இருப்பது போல்
தேக்கியிருக்கிறது உளம் உம்மை
செந்தூரமாய் செம்பருத்தியாய்
செஞ்சாய உடை சூடி
செங்கம்பள வீதிவழியே
செவ்வனே வந்தீர்
பட்டமளிப்பு விழாவில்
மறுநாள் மதியம் -என்
செவியில் பதியும் - உஸ்தாத்
ஹைருல் பஸரையும்
அழைத்தது விதியும்
புகுந்தார் இறைச்சந்நிதியும்
நாளை நாம் சுவனம் வருவோம்
அறிவோலை சகிதம் வருவோம்
அறிவுப்பாலை பருக வருவோம்
சீடர்களாய் எம்மை தருவோம்
பாடம் - ஸரஹ{ல் ஹதீஸ்
2017ஃ03ஃ17-பரீட்சை நாள்
2017ஃ03ஃ13- உலகபரீட்சை முடிவு

என் அன்புக்குரிய ஆசானே உங்கள் பாவங்களை அழ்ழாஹ் மன்னித்து உங்களுக்கு உயர்ந்த சுவர்கத்தை தருவானாக.
ReplyDeleteஆமீன்.
இறைவன் உயரிய சுவனத்தை அளிக்கவேண்டும்
Delete