Thursday, 19 January 2017

எனைப்பற்றி

பெயர்-அஹ்னப் ஜெசீம்

தந்தை-ஜெசீம் அப்துல் கபூர்

தாய்-அனீஸா ஜெசீம்

பிறப்பு-1995.10.16

பிறந்த இடம்- கற்பிட்டி புத்தளம்

விலாசம்- மன்னார்
சிலாவத்துறை,
பண்டாரவெளி


Mannar, Silavathurai
pandaraveli

க.பொ.த(சா/த) பரீட்சைக்கு தோற்றும் வரை புத்தளம் நுரைச்சோலையில் உள்ள கொய்யாவாடி மு. ம.வி இல் கற்றேன்.
எனது தமிழ், விஞ்ஞான ஆசிரியர் ரயிசுதீன் அப்துஸ்ஸலாம்.
ஆங்கில அறபு சிங்கள மொழிகளை கற்றுவருகிறேன்.
ஜாமிஆ நளீமியா உயர்கல்வி நிறுணவத்தில் கல்வி பயின்று வருகிறேன்
கவிதை,சிறுகதை,கட்டுரை எழுதுவது எனது வழமை.

என்றும் நான் மறவாத சில உபதேசங்கள்(வரிகள்)


சதி நின்றாட வெறிகொண்டோடு
 உன் வெற்றிப்பாதையில்
 வேங்கை வந்தால் வெட்டிப்போடு 
தலை துண்டாக
 பேயும் நரியும் விரண்டோட
 மதிகொண்டு நீயாடு

என்னாசான்- ரயிசுதீன்(Vanniras)

பெற்றோரின்றி பிறந்திருக்கமாட்டாய்
 மனமிருந்து உணர்ந்திருந்தால்
நீ மறந்திருக்கமாட்டாய்

என்தோழன்- Fasmin Jaafer

புலிக்குறி புள்ளெனில்
 புள்ளை பிடிக்கும் 
இலக்கறியாது இடையே
 மரையே வந்தாலும்
 தடமாறாது குறிதவறாது.

எந்தை-Jazeem A gafoor

கடற்கரை காலடியும் 
கரும்பலகை கையெழுத்தும்
கல்லூரிக்காதலும்
நிலைத்ததில்லை என்றுமே

என்னாசிரியை-ஹதீஜா

பயிலோர் துயிலார்
துயிலோர் பயிலார்

-என்சிந்தை-

மன்னாருன் தாயகமென்று
மகிழ்ந்துநில்லடா
மண்ணில் மனிதனென்று 
மமதை கொள்ளடா
மயலுறு மார்க்கமுனதென்று
மனிதருக்கு சொல்லடா
மனுநீதிக்கெதிரானவன் எவனென்று
மண்ணில் தேடிக்கொல்லடா

   -மன்னாரமுது அஹ்னப் -

No comments:

Post a Comment