Wednesday, 27 April 2016

அநுபவக்குமுறல்

மங்கிப்போன
மாலையாகியும்
கனல்தனை
கதிரவன்
கக்கிக்கொண்டேதான்
இருக்கிறான்.

சிக்கிகொண்ட நான்
அதன் மயலெழிலில்
சொக்கித்தான் பரிதவிக்கிறேன்.
திக்கித்தான் சிக்கித்தான் சொல்லெடுத்து கவி வடிக்கிறேன்.

மக்கிப்போன மாட்டு
மண்டையொன்றை
நக்கித்திரியும் நாயொன்று
நக்கித்தான் பசி போக்குது.

உப்புத்தென்றெலோடு
குப்பென்று வீசுது செத்தமீன் மணம்
தப்பென்ன நான் சொன்னேன்
மன்னாரென்றாலே
மப்பு மந்தாராமாய்தான் இருக்கும். இருந்தும் தப்பித்தவறியும் எம்மை தொப்பாக்கும் மழை பெய்யாது.

கொழுத்தும் கோடையினிலே
வெளுத்த வான் கறுக்காது
கொந்தளிக்கும் குளத்தில்
மசறியும் நெத்தலியும்
தத்தளித்தே செத்தழியும்.

ஆண்டவனே அருளிடு-பல்
ஆண்டு வாழ நல்ல பொருளிடு
மாண்டுவிடாதிருக்க குளிரிடு
வெப்பகூண்டிருந்து விடுவித்திடு

1 comment: