அழகே! அமுதே!
தேனே! மானே!
மயிலே! குயிலே!
நதியே! விதியே!
உன்னை நானடி
அயராது பயிலாது
துயிலாது காதலித்தேன்
ஆடையெது வாடையெது
ஓடையெது கோடையெது
பாடையெது பீடையெது
நனவெது கனவெது
மெய்யெது பொய்யெது
அறியாது காதலித்தேன்
பூவனம் பூமணம்
சுவனம் நந்தவனம்
அத்தினம் ரத்தினம்
புதினம் நறுமணம்
உறுமணம் திருமணம்
நமக்கென்றாய் நடக்குமென்றாய்
விடுமுறையின்றி இடைவிடாது
விடுவிடுவென விரலமுக்கி
குறுஞ்சேதி நானனுப்ப நீயெனக்கனுப்ப
அது குதூகலம் புது ஞாலம்
நீயே உயிர் நான் உடல்
என்றாய்
நானே தயிர் நீ புசிப்பாய்
என்றாய்
நானே பயிர் நீ மேய்வாய்
என்றாய்
நீயே வாழ்வு இன்றேலிறப்பேன்
என்றாய்
இத்தனையும் உன் குரலமிழ்தில்
சொன்னாய்
வீட்டார் யாரும் அறியாது கடிதாய்காவல்
நாயானேன்
சேவல் கூவியெழுப்புமோ
என்னவோ?
கடிகாரம் ஒலியெழுப்புமோ
என்னவோ?
விடியாதோ விடியுமோ
என்னவோ?
அப்பொழுதும் முடியாது அனுப்பும்
குறுஞ்சேதி
காலம் சுழன்றதடி, நீ என்னோடு
இல்லையேல் காலம் தவழ்ந்ததடி
உன் நினைவு என்றும் எனக்கு
கன்னலாய் மணம் கமழுமடி
ஒருநாளுனக்கு நான் சேதி
அனுப்பி
சங்கதி என்ன? உன் கதி
என்ன?
கடுகதியாய் குறுஞ்சேதி
அனுப்பென்றேன்
குருதி கொதிக்க பதில்தராது
தவிக்கவிட்டாய்
பிறகு சொன்னாய் நான் கற்கத்தான்
வந்தேன்
விறகாய் பற்றி என் உள்ளம்
எரிந்தேன்
இறகானேன் இறக்கலானேன் உனை
மறந்தேன்
சித்தமெனது தெளிந்து பிறந்தது
ஞானத்தேன்
ஆழக்கவலையில் கண்ணீர்
திவலையில்
தாழப்போகையில் தோல்வித்
தீவலையில்
வீழப்போகையில் நீளத்
தொலைவில்
மீள நான் வாழக்கண்டேன் புது
நிலையில்
நீ மட்டுமென்ன ஞானம்
கற்க
நான் மட்டுமென்ன தெருவில்
நிற்க
என் மானம் மட்டுமென்ன
விற்க
நீதேவையில்லை என்றும்நீயென்
தொல்லை
பெண்ணை நம்புவது
வம்படி
நான் என்னை நம்புவது
தெம்படி
வாங்கியது போதும்
கம்படி
மீண்டெழுவேன் நான் இதை
நம்படி
நீ இனித்தாய்
சீனி
நீ எண்ணினாய் நானுன்
தீனி
நீ என்றும் எனக்கு
தீ... நீ..
நீ வேண்டாம் எனக்கு இனி
சீ....நீ....
அமிழ்து-அறுசுவை உண்டி -உணவு
திவலை -துளி
காதல் தோல்வியில் பரிதவிக்கும் இளைஞர்களின் குமுறல்....அழகான வரிகளில் அற்புதமாய்
ReplyDelete