Sunday, 14 February 2016

நவகவியோ...! பழங்கவியோ....?

ஒரு புறம் கவி மரபு
மறு புறம் கவி நவ நரம்பு
இரண்டுக்குமிடையில்
நானா? தரகு
மீறவா? மரபு வரம்பு

மரபை மறவேனே
மரபை
மறவெனச்சொன்னால்
மரிப்பேனே
மறத்தமிழ் மாண்பு
மறவேனே
மறைதர்மெம் மாண்பு
துறவேனே

# மரபுக்கவி #
-------------------
புதுக்கவி எழுதட்டாம்
பழங்கவி விலக்கட்டாம்
பழகின தோழர் சொன்னது
பாழுங்கிணற்றில் புதைக்கட்டாம்

பாவங்களை பகைக்கட்டாம்
பாக்களை புதைக்கட்டாம்-புதுக்கவி
பூக்களை விதைக்கட்டாம்
விளங்காத சொல்ல சிதைக்கட்டாம்

பழங்கவியோடு புழங்கிய என்ன
பழக்கமில்லா புதுக்கவியோடு
புழுங்கச்சொன்னா
அழுங்காக மாறி
விளாக்காய் மரமேறி
விளங்காது போவேனே

# நவகவிநரம்பு #

இனி நான் புதுக்கவி எழுதுவதாயும்
உத்தேசம்
மரபெழுதாது விட இல்லை இம்மியும்
உத்தேசம்

No comments:

Post a Comment