Sunday, 15 November 2015

பிளிறி அழுகிறது பிரான்ஸ்

காஷ்மீர் பஸ்பமாகிறது
காஸா கதறியழுகிறது
பர்மா பதறியழழுகிறது
சிரியா சிதறிவிழுகிறது

ஆப்கானிஸ்தான் அலறியழுகிறது
எகிப்து குளறி அழுகிறது
இத்தனை தேசத்திலும்
எதிரி ஏவுகணை
எரிந்து விழுகிறது.

பர்ப்பார் கேட்பார் கவனிப்பார்
எவரும் இல்லை
ஏறெடுத்துப்பார்க்க
எதுவும் இல்லை
எட்டிப்பார்க்க எவனுக்கும்
நெஞ்சுத்துணிவில்லை

ஆனால் பிரான்ஸ் மட்டும்
பிளிறி அழுகிறது
அதனை ஐ.நா வும்
ஆதரித்து தொழுகிறது

No comments:

Post a Comment